பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

புறநானூறு - மூலமும் உரையும்


(பரிசில் வேட்டுப் பாடுதலின் பரிசில் துறை ஆயிற்று)

கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும், தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும், எல்லா உயிர்க்கும் இல்லால், வாழ்க்கை; இன்னும் தம்மென எம்மனோர் இரப்பின், முன்னும் கொண்டிர்என, நும்மனோர் மறுத்தல் 5 இன்ன்ாது அம்ம இயல்தேர் அண்ணல் இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும், உள்ளி வருநர் நசையிழப் போரே, அனை யையும் அல்லை, நீயே, ஒன்னார் ஆர்எயில் அவர்கட்கு ஆகவும், 'நுமது எனப் 10 பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்! பூண்கடன், எந்தை! நீ இரவலர் புரவே. - 'கழிந்த காலத்துப் பெய்தேன்; இந்நாளிற் பெய்யேன், என மழை மாறினாலும், முற்காலத்து விளைந்தேன் இக் காலத்து விளையேன்” என நிலம் விளைவு ஒழிந்தாலும், உயிர்கள் வாழாது மடியுமன்றோ! அதுபோல், ‘இன்னுந் தாரும்', என இரவலர் இரப்பின், 'முன் தந்தோம்’ எனல் நும்போல் வார்க்கு இனிதேயன்று. தேருடைய அண்ணலே! கேளாய்:பரிசில் வேண்டி வருபவரினும், பரிசில் கொடாதவர், தம்மைப் பலர் தேடி வரும் புகழையும் இன்பத்தையும் இழந்தவராவர். இல்லையெனச் சொல்லுமளவு வறியவனும் அல்லன் நீ பகைவர் அரண்களை வெல்லுமுன்பே, வெற்றி பெறும் உறுதியால் இரவலர்க்கு நுமது என வழங்குபவனான நீ, இனியும் இவ்வாறு கூறாது, இரப்போரைப் பேணிக் காத்தலே முறை எனக் கொள்வாயாக

சொற்பொருள்: 8. உள்ளி வருநர் நசை இழப்போர். அவராற் பரிசில் நினைந்து வரப்படுவார் கொடாராயின், அவ்விரப் போரால் நச்சப்படும் இன்பத்தை இழப்பார்.

204. அதனினும் உயர்ந்தது! பாடியவர்: கழைதின் யானையார். பாடப்பட்டோன்: வல்வில் - ஒரி. திணை: பாடாண். துறை: பரிசில், -

(ஈயேன் என்னும் இழிபினும், கொள் எனக் கொடுக்கும் உயர்பினும், நினக்குத் தக்கது அறிந்து செய்க என்று கூறியதாகக் கொள்க)

ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர், ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;