பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

11


با" ۰ بیحجه ساخته مس -سسه ۰

அருளாளனுமாதலின், வெம்மைக்கு ஞாயிற்றையும், தண்மைக்கு நிலவையும் கூறி, அவை போல் வாழ்க என்றார்)

சொற்பொருள்: வடாஅது - வடக்கின்கண் உள்ளதாகிய, 2.தெனாஅது முதலியவற்றிற்கும் அவ்வாறே கண்ணுருபு விரித்துரைக்க உரு உட்கு அச்சம், முப்புணர் - நிலம், ஆகாயம், சுவர்க்கம். 7. ஆன்நிலை உலகம்-கோலோகம்; ஆன் - உயிர்களைக் குறிப்பதால் கோலோகம் உயிர்கள் இறையடி சேரும் பேரின்ப உலகைக் கூறுவதாகும். சுவர்க்கம், போக உலகம் என உணர்க. 9. ளுமன் - துலாக்கோலின்கண் உள்ள சமநிலையை உணர்த்தும் உறுப்பு: தராசு முள் போல்வது என்பர். ஞமன்ன் : ஒற்றளபெடை 4. பாசவல் - பசுமையான விளை நிலம். 26. குடுமி - அண்மை விளி; பாண்டியனை விளித்தது. -

7. வளநாடும் வற்றிவிடும்!

பாடியவர்: கருங்குழல் ஆதனார். பாடப்பட்டோன். சோழன் கரிகாற் பெருவளத்தான். திணை: வஞ்சி. துறை: கொற்ற வள்ளை மழபுல வஞ்சியும் ஆம். -

("பிறரது அகன்றலை நாடு நல்ல இல்ல வாகுப' என்றமையாற் கொற்றவள்ளை ஆயிற்று. 'ஊர் சுடு விளக்கத்து அழிவிளிக் கம்பலை என்றமையால், மழபுல வஞ்சி ஆயிற்று. இச் செய்யுளை வஞ்சித்திணையின் "எரிபரந்து எடுத்தல் துறைக்குக் காட்டுவர் (தொல் புறத். சூ. 8 நச்). இயல் தேர் வளவ' என்றது, இவன் அடுத்தடுத்துப் போர்மேற் சென்றவனாதலை வலி யுறுத்தும். களிறு கடைஇய தாள்’ என்றது, கரிகாலன் என்னும் பெயரின் விளக்கம் போலவும் தோன்றும்)

களிறு கடைஇய தாள்,

கழல் உரீஇய திருந்துஅடிக், கணை பொருது கவிவண் கையால், கண் ஒளிர்வருஉம் கவின் சாபத்து மாமறுத்த மலர்மார்பின், - 5

தோல் பெயரிய எறுழ் முன்பின், எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர் ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக் கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ! 10 தண்புனல் பரந்த பூசல் மண் மறுத்து மீனின் செறுக்கும் யாணர்ப் | பயன் திகழ் வைப்பின், பிறர் அகன்றலை நாடே.