பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

புறநானூறு - மூலமும் உரையும்


(வெளிமான் துஞ்சியபின், இவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது பாடிய செய்யுள் இது. பெரிதே உலகம்; பேணுநர் பலரே என்னும் சொற்கள் செறிவானவை)

எழுஇனி, நெஞ்சம் செல்கம், யாரோ; பருகு அன்ன வேட்கை இல்வழி, அருகிற் கண்டும் அறியார் போல, அகம்நக வாரா முகன்அழி பரிசில் தாள்இலாளர் வேளார் அல்லர்? - 5 வருகென வேண்டும் வரிசையோர்க்கே பெரிதே உலகம்; பேணுநர் பலரே,

மீளி முன்பின் ஆளி போல, உள்ளம் உள்அவிந்து அடங்காது, வெள்ளென நோவா தோன்வயின் திரங்கி, 10

வாயா வன்கணிக்கு உலமரு வோரே.

எம் நெஞ்சமே, எழுந்திரு! யாம் போவோமாக. யார் தாம், விருப்பமுடன் பாராது, கண்டும் அறியார்போல் உள்ளத்தில் மகிழ்வின்றித் தரப்பட்ட பரிசிலை விரும்புவர்?'வருக என எம்மை எதிர்கொள்ளல் வேண்டும்! இத்தகைய தகுதிபடைத்த எம் போன்றார்க்கு உலகமும் பெரிது, எம்மை விரும்புபவரும் பலர். ஆதலால், யாளியை ஒத்த வலியுடையவனே! கண்டவர் அனைவர்க்கும் தெரியுமாறு எம்மைக் கண்டு இரங்கி அருளாதவனிடத்தே நின்று கேட்டு, உள்ளுறக் கனியாத வலிய பழம்போன்ற அவன்பால், பரிசில் வேண்டார்ன்ம் போன்றவர்.நின் செய்கையைக் கண்டு எம் உள்ளம் அமைதியுடன் பணிந்தும் கிடவாது காண்.

சொற்பொருள்: 4, அகம்நக வாரா - உள்ளம் மகிழ வாராத, முகனழி பரிசில் தம் முகம் மாறித் தரப்பட்ட பரிசிலை. 5. தாளிலாளர் - பிறிதோரிடத்துச் செல்ல முயற்சியில்லாதோர். வேளாரல்லர் - விரும்பாரல்லர். 9. உள்ளம் உள் அவிந்து அடங்காது - உள்ளம் மேற்கோளின்றித் தணியாது.

208. வாணிகப் பரிசிலன் அல்லேன்! பாடியவர்: பெருஞ்சித்திரனார். பாடப்பட்டோன் : அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: பாடாண். துறை: பரிசில்.

(கண்டு பாராட்டி வழங்காது, பரிசில் மட்டும் கொடுத்து அனுப்பியபோது பாடிய செய்யுள் இது. "யானோர் வாணிகப் பரிசிலேன் அல்லேன்' என்கிறார் புலவர்)