பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

219


"குன்றும் மலையும் பலபின் ஒழிய வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்கு என, நின்ற என்நயந்து அருளி, ஈது கொண்டு ஈங்கனம் செல்க, தான் என என்னை யாங்குஅறிந்தனனோ, தாங்கரும் காவலன்? 5

காணாது ஈத்த இப்பொருட்கு யானோர் வாணிகப் பரிசிலன் அல்லேன், பேணித் தினைஅனைத்து ஆயினும், இனிதுஅவர் துணைஅளவு அறிந்து, நல்கினர் விடினே. பரிசில் கருதிக் குன்றும் மலையும் பல கடந்து வந்தேன். என்னை அன்புடன் உபசரித்து இப் பொருளைக் கொள்க என்று சொல்லினனோ? என் திறனை எவ்வாறு அறிந்தான் இவன்? என்னை அழைத்துக் காணாதே தந்த பொருள் இது. இதனைக் கொண்டு செல்ல யானோர் வாணிகப் பரிசிலன் அல்லேன். என் தகுதியறிந்து தரும் பரிசில் தினையளவேயாயினும் அதுவே எனக்கு இனிது. இவ்வாறு தருவது இனிது அன்று காண்.

சொற்பொருள்: 5. தாங்கருங் காவலன் - பகைவரால் தடுத்தற்கரிய வேந்தன். 6. காணாது ஈத்த இப்பொருட்கு என்னை யழைத்துக் காணாதே தந்த இப்பொருட்கு. 9. அவர் துணையளவறிந்து நல்கினர்விடின் - அந்தப் பரிசிலரது கல்வி முதலாகிய பொருந்திய எல்லையை அறிந்து கொடுத்து விடின்.

209. நல்நாட்டுப் பொருந!

பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார். பாடப்பட்டோன்: மூவன். திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை.

(மூவன் பரிசில் நீட்டித்தபோது பாடிய செய்யுள் இது. 'ஈயாய் ஆயினும் இரங்குவேன் அல்லேன்; நோயிலை ஆகுமதி பெரும என்று மனம் வெதும்பிப் பாடுகின்றார் புலவர்)

பொய்கை நாரை போர்வில் சேக்கும்

நெய்தல்அம் கழனி, நெல்அரி தொழுவர்

கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல் அகல்அடை அரியல் மாந்தித், தெண்கடல் படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும் - 5

மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந! பல்கனி நசைஇ, அல்கு விசும்பு உகந்து, பெருமலை விடர்.அகம் சிலம்ப முன்னிப் பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக், கையற்றுப் பெறாது பெயரும் புள்ளினம் போல, நின் 10