பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

புறநானூறு - மூலமும் உரையும்



நசைதர வந்து, நின் இசைநுவல் பரிசிலென் வறுவியேன் பெயர்கோ? வாள்மேம்படுந! ஈயாய் ஆயினும், இரங்குவென் அல்லேன்; நோயிலை ஆகுமதி; பெரும! நம்முள் குறுநணி காண்குவதாக - நாளும் 15 நறும்பல் ஒலிவரும் கதுப்பின், தேமொழித், தெரியிழை மகளிர் பாணி பார்க்கும்

பெருவரை அன்ன மார்பின், செருவெம் சேஎய்! நின் மகிழ்இருக் கையே!

பொய்கையிலே மேய்ந்த நாரை போரிலே வந்து உறங்கும். நெய்தல் நில வயல்களிலே நெல்லறுக்கும் உழவர், ஆம்பல் இலையிலே மதுவுண்டு, கடலலையின் தாளத்திற்கு ஏற்பக் குரவையாடி மகிழ்வர். அத்தகு ஊர்கள் நிறைந்த, நல்ல நாட்டின் காவலனே! வானிலே நெடுந்தொலைவுக்குப் பறந்து பழமரம் தேடிச் சென்ற பறவையினம், மரத்தையடைய, அது பழமற்றுவிடக் கண்டு வருந்தித் திரும்புவதுபோல, நின்பால் பரிசில் வேட்டுவந்த யானும் வறிதே திரும்புவதோ? வாள் வல்ல மூவனே! மகளிர் விரும்பும் மார்பனே! எமக்கு ஏதும் தாராயாயினும், நின் நாளோலக்கத்தில், நீ நோயின்றி வாழ்க பெருமானே! நம்மிடையே நெருக்கம் இனியேனும் காண்பதாக!

சொற்பொருள்: 1. சேக்கும் உறங்கும். போர்வு நெற்கதிர்ப் போர். 4. அடை - இலை. அரியல் - மது. 5. பாணிதுங்கும் தாளத்தோடும். குறுநணி அணிய அணிமைய. 15. நம்முட் குறுநணி காண்குவதாக என்றது, நீ என்மாட்டுச் செய்த அன்பின்மையை, அஃதாவது நாம் இருவர் அன்றிப் பிறர் அறியாது ஒழிவாராக, என்னும் நினைவிற்று. பாணி காலம்.

210. நினையாதிருத்தல் அரிது! பாடியவர்: பெருங்குன்றுர் கிழார். பாடப்பட்டோன் : சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை. திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை.

(சேரன் பரிசில் நீட்டித்த போது புலவர் பாடியது இச் செய்யுள்) r

மன்பதை காக்கும்நின் புரைமை நோக்காது, அன்புகண் மாறிய அறனில் காட்சியொடு, நும்மனோரும்மற்று இனையர் ஆயின், எம்மனோர் இவண் பிறவலர் மாதோ, செயிர்தீர் கொள்கை எம்வெங் காதலி . 5