பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

223


கொள்ளாத மாந்தர்.12. புறநிலை - புறம் கடைநின்ற நிலை என்றும் ஆம்.14. நுணங்கு நுண்ணிய ஆராய்ச்சி. 21. முலைக்கோள் மறந்த - முலை யுண்டலை வெறுத்த, - -

212. யார் உம் கோமான்?

பாடியவர்: பிசிராந்தையார். பாடப்பட்டோன் : கோப்பெருஞ் சோழன். திணை: பாடாண். துறை: இயன்மொழி. -

(சோழனின் நல்லியல்பைச் சிறப்பித்துப் பாடிய செய்யுள் பொத்தியாரோடு நட்புக்கொண்டு விளங்கும் சோழனது மாண்பையும் கூறுகின்றனர்)

'நுங்கோ யார்?' என வினவின், எங்கோக் களமர்க்கு அரித்த விளையல் வெங்கள்

யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா, ஆரற் கொழுஞ்சூடு அங்கவுள் அடாஅ, வைகுதொழின் மடியும் மடியா விழவின் - 5 யாணர் நல்நாட் டுள்ளும், பாணர் - பைதல் சுற்றத்துப் பசிப்பகை யாகிக், கோழி யோனே, கோப்பெருஞ் சோழன் பொத்தில் நண்பின் பொத்தியொடு கெழீஇ, வாயார் பெருநகை வைகலும் நமக்கே. 10

o குற்றமற்ற நட்பினனாகப் பொத்தி என்னும் புலவனொடு

நாடோறும் பேசி மகிழ்ந்து வாழ்பவன் உறையூர் என்னும் படை வீட்டிடத்திலே பசிக்குப் பகைவனாகப் பாடிவரும் பாணரின் சுற்றத்திற்கு வழங்கி உதவுபவனாக இருக்கின்றவன், மதுவை ஆமை இறைச்சியுடன் ஆசைதீர உண்டும் அமையாது, ஆரல்மீனின் கொழுப்பான கறியைக் கன்னம் புடைக்க அடக்கிக்கொண்டு, தம் தொழிலையும் மறந்து திரியும் உழவர் மலிந்த வளமிக்க சோணாட்டு மன்னவனாக விளங்குபவன், கோப்பெருஞ் சோழன். அவனே, என் கோமான்!

சொற்பொருள்: 2 களமர் - உழவர். 3. யாமைப்புழுக்கின்

ஆமை இறைச்சியுடனே. காமம் வீட வேட்கைதீர. 4. ஆரற் கொழுஞ்சூடு ஆரல்மீனின் சுடப்பட்ட இறைச்சி கவுள் கதுப்பு. அடாஅ - அடக்கி. 7. பைதல் வருத்தம், 8. கோழி - உறையூர். 9. பொத்து - புகை, குற்றம்.10. வாய் - வாய்மை. நக்கு - மகிழ்ந்து.

213. நினையும் காலை!

பாடியவர்: புல்லாற்றுார் எயிற்றியனார். பாடப்ப்ட்டோன். கோப்பெருஞ் சோழன் திணை: வஞ்சி. துறை: துணை வஞ்சி.