பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

புறநானூறு - மூலமும் உரையும்




குறிப்பு: கோப்பெருஞ் சோழன் தன் மக்கள்மேற் போருக்கு எழுந்தகாலைப் பாடிச் சந்து செய்தது.

('நின் மறவென்றியைக் கைவிடுக. உயிருக்கு உறுதி பயக்கும் ஒழுகலாற்றிற் செல்லுக' என்று அறிவுறுத்திச் சந்து செய்விக் கின்றனர் புலவர்)

மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள், வெண்குடை விளக்கும், விறல்கெழு வேந்தே! பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து, நின்தலை வந்த இருவரை நினைப்பின், தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர், 5

அமர்வெங் காட்சியொடு மாறுஎதிர்பு எழுந்தவர். நினையுங் காலை, நீயும் மற்றவர்க்கு அனையை அல்லை; அடுமான் தோன்றல் பரந்துபடு நல்லிசை எய்தி; மற்று நீ உயர்ந்தோர் உலகம் எய்திப் பின்னும் 1 O ஒழித்த தாயம் அவர்க்கு உரித்து அன்றே: அதனால், அன்னது ஆதலும் அறிவோய், நன்றும் இன்னும் கேண்மதி, இசைவெய்யோயே! நின்ற துப்பொடு நின்குறித்து எழுந்த எண்ணில் காட்சி இளையோர் தோற்பின், - 15 நின்பெரும் செல்வம் யார்க்குஎஞ் சுவையே? அமர்வெஞ் செல்வ! நீ அவர்க்கு உலையின், இகழுநர் உவப்பப் பழியெஞ் சுவையே; அதனால், ஒழிகதில் அத்தை, நின் மறனே! வல்விரைந்து எழுமதி, வாழ்க, நின் உள்ளம் அழிந்தோர்க்கு 20 ஏமம் ஆகும்நின் தாள்நிழல் மயங்காது செய்தல் வேண்டுமால், நன்றே - வானோர் அரும்பெறல் உலகத்து ஆன்றவர் - விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே.

வெண்கொற்றக் குடை நிழலில் அமர்ந்து, உலகம் காத்து அருளும் புகழ்மிக்க வேந்தனே! நின்னோடு போர்க்கு வருபவர் பழைமையான பகைவராகிய சேரபாண்டியர் இருவரும் அல்லர். நினைத்துப் பார்த்தால் நீயும் அவர்க்குப் பகைவனே அல்லன். பகைவரை அழிக்கும் யானைகளை உடைய தலைவனே! இவ்வுலகிலே புகழை நிறுத்தி நீ மறைந்தால், ஆட்சிக்கு உரியவர் அவரே யன்றோ? அதனையும் நீ அறிந்தவனே! இன்னமும் கேள்: நின் புதல்வர் தோற்று வீழ்ந்தனரென்றே கொண்டாலும், அதன்