பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

புறநானூறு - மூலமும் உரையும்



களிறுகளைச் செலுத்திய தாள்கள், வீரக் கழல் ஒலிக்கும் கால்கள், கண்போன்று விளங்கும் அழகிய வில், பரந்த மார்பு, யானையையும் பெயர்க்கும் பெருவலிமை ஆகியவற்றை உடையவனே! நீ பகைவரை அழித்தலையே இரவும் பகலும் கருத்தாகக் கொண்டவன்.நின்னால் எரி கொளுவப்பட்டு எரிகின்ற தீயின் ஒளியிலே, அவ்வூரவர் தம் சுற்றத்தாரை அஞ்சி உருக்கமாக அழைத்துக்கொண்டிருக்கும் கூக்குரல் கேட்கும். அந்த இரைச்சலிலும் சூறையாடுதலில் விருப்பமுடையவனாகச் செல்பவன் நீ! நின்னை எதிர்ப்பவர் நாட்டிலே நல்ல நல்ல பொருள்கள் ஏதும் மிஞ்சி இரா. தேரூர்ந்துவரும் வளவனே கட்டு மீறிவரும் நீர்ப்பெருக்கை மண்ணால் அடையாது, மீனால் அடைக்கும் நீர் வளஞ்செறிந்த ஊர்களுடைய நினது மாற்றார் நாடுகளின் கதி இவ்வாறானால், எவர்தாம் நின்னைத் துணிந்து இனியும் எதிர்ப்பவர்? (நினக்கு எதிரியே கிடையாது என்பது கருத்து) - -

சொற்பொருள்: 2. திருந்துஅடி - போரிற் புறங்கொடாத, கால் உறுப்புநூல் வல்லார் கூறும் இலக்கணங்கள் அமைந்த அடி எனலும் ஆம். 4. சரபம் - வில். 5. மாமறுத்த - வெற்றிமகள் பிறர் மார்பை மறுத்ததற்குக் காரணமாகிய, 6. தோல் - யானை. எறுள் முன்பு - மிக்க வலி: ஒரு பொருட் பன்மொழி. 11. பூசல் - உடைப்புக்கள்.12 செறுக்கும் அடைக்கும். யாணர்-புது வருவாய். 8. கதிர்நிகர் ஆகாக்காவலன்! பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன்: சேரமான் கடுங்கோ வாழியாதன்: சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்பவனும் இவனே. திணை: பாடாண். துறை: இயன்மொழி; பூவை நிலையும் ஆம் - -

('பூவை நிலை என்பது மனிதனைத் தேவரோடு உவமித்துப் போற்றுதல் சேரலாதனைக் கதிரவனோடு உவமித்துக் கூறுதலால் இதனைப் பூவை நிலையாகக் கொள்க. தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியர், தொல்காப்பிய உவமயியல் உரையுள் (சூ.32) இச் செய்யுளுக்குச் சிறந்த உரையொன்றை வகுத்துள்ளார். அதனையும் கற்று இச் செய்யுளது பொருள்நயச் செறிவினை அறிந்து இன்புறுக) .

வையம் காவலர், வழிமொழிந்து ஒழுகப், போகம் வேண்டிப், பொதுச்சொல் பொறாஅது. இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப, ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகைக், கடந்துஅடு தானைச் சேரலாதனை - 5