பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

புறநானூறு - மூலமும் உரையும்


நிற்கவே மாட்டான். இப்பொழுதே வருவான். அவனுக்கும் என்னுடனிருக்க இடம் ஒதுக்குங்கள். A

சொற்பொருள்: 1. கேட்டல், ஒழுகல் என்றது, தன்னுழை யிருந்த அறிவாளரை. 4. அதற்பட அவ் வழுவாத கூற்றிலே பட: அவ்விறந்துபாட்டிலே பட என்று கூறினும் அமையும். 5. ஆர் அறிவாளிர் நிறைந்த அறிவினையுடையீர்.11 இன்னதோர் காலை - இப்படி யான் துயரமுறுங் காலத்து.

217. நெஞ்சம் மயங்கும்!

பாடியவர்: பொத்தியார். திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. குறிப்பு :கோப்பெருஞ் சோழன் சொன்னவாறே பிசிராந்தையார் அங்கு வந்தனர்; அதனைக் கண்டு வியந்த பொத்தியார் பாடிய செய்யுள் இது.

('நினைக்குங் காலை மருட்கை உடைத்தே' என்று அந் நிகழ்ச்சியைக் குறிப்பிடுகின்றார் புலவர். இருவரும் மாய்வது பற்றிய இரங்குதலும் தோன்றச் செய்யுள் அமைதலின், கையறுநிலை ஆயிற்று)

நினைக்கும் காலை மருட்கை உடைத்தே, எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்; அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டுத் தோற்றம் சான்ற சான்றோன் போற்றி, இசைமரபு ஆக, நட்புக் கந்தாக, 5

இணையதோர் காலை ஈங்கு வருதல்; 'வருவன்' என்ற கோனது பெருமையும், அது பழுது இன்றி வந்தவன் அறிவும், வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே! அதனால், தன்கோல் இயங்காத் தேயத்து உறையும் 10 சான்றோன் நெஞ்சுரப் பெற்ற தொன்றிசை அன்னோனை இழந்தஇவ் வுலகம் என்னா வதுகொல்? அளியது தானே! பெருஞ் சிறப்புடன் வாழ்ந்த இம் மன்னன், வடக்கிருந்து உயிர்விட எண்ணினான். அதுவே வியப்பைத் தருவது. பிற நாட்டிலே வாழும் விளக்கமான சான்றோன், புகழே மேன்மை யாகவும் நட்பே பற்றுக்கோடாகவும் கருதினவனாக, இத் துயரமுள்ள காலத்திலே இங்கு வந்தானே, அஃது அதனினும் வியப்புத் தருவது. இவ்வாறு, 'அவன் வருவான்’ எனச் சொல்லிய வேந்தனின் நட்புமிகுதியும், அது பழுதுபடாமல் வந்தவனது