புலியூர்க் கேசிகன்
231
யானையின் உதவியால் சோற்றுக் கவலையின்றி வாழ்ந்து வந்த ஒரு பாகன், அவ் யானை இறந்து போகவும், அவ் வருத்தம் மிக அதனைக் கட்டியிருந்த கம்பம் வறிதே இருக்கக் கண்டு, கண்கலங்கி நின்று துயருறுவான். அதே போன்று, சோழனே, எம்மைக் காத்துப் புரந்த நீ இருந்த உறையூர் மன்றத்தைக் கண்டு, யானும் கண்கலங்கி நின்றேன் அல்லனோ?
சொற்பொருள்: 1. சோறு பயந்து - சோற்றையுண்டாக்கி. 2. பைதல் வருத்தம். அல்கிய தங்கிய 3. ஆலை - கூடத்தின்கண். 4. வெளில் - கம்பம். பாழ் ஆக - வறிதே நிற்க. 7. மன்றம் - செண்டு வெளி அரண்மனையைச் சார்ந்த குதிரை ஏற்றம் பயிலும் இடம்; இதனை வையாளி வீதி என்பர். அழுங்கல் - முன்புள்ள ஆரவாரமும் ஆம். இறந்த என்று சொல்லுதல் இன்னாமையால், 'போகிய என்றார். * :
221. வைகம் வாரீர்!
பாடியவர்: பொத்தியார். பாடப்பட்டோன். கோப்பெருஞ் சோழன். திணை: பொதுவியல் துறை: கையறுநிலை குறிப்பு: சோழனது நடுகற்கண்டு பாடிய செய்யுள் இது.
(காஞ்சித் திணைத் துறைகளுள், 'மன் அடாது வந்த மன்னைக் காஞ்சிக்கு நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டுவர் (தொல். புறத். சூ. 24) . .
பாடுநர்க்கு ஈத்த பல்புகழன்னே; ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே, அறவோர் புகழ்ந்த ஆய்கோலன்னே, திறவோர் புகழ்ந்த திண்நண் பினனே, மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து; 5
துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில், அணையன் என்னாது, அத்தக் கோனை, நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்தன்று; பைதல் ஒக்கல் தழிஇ, அதனை வைகம் வம்மோ, வாய்மொழிப் புலவீர்! 1O
'நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்,
கெடுவில் நல்லிசை சூடி,
நடுகல் ஆயினன் புரவலன் எனவே.
பாடி வந்தவர்க்குக் கொடுத்த பெரும்புகழினை உடையவன்; கூத்தர்க்கு வழங்கிய அன்பினை உடையவன்; அறநெறி வழுவாது ஆண்ட செங்கோலன்; சான்றோர் புகழ்ந்த திண்ணிய நட்பினன்;