பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

235


கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர, நிலமார் வையத்து வலமுறை வளைஇ, வேந்து பீடழித்த ஏந்துவேல் தானையொடு, 5 ஆற்றல் என்பதன் தோற்றம் கேள், இனிக் கள்ளி போகிய களரியம் பறந்தலை, முள்ளுடை வியன்காட் டதுவே - நன்றும் சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்?" என, . இன்னிசைப் பறையொடு வென்றி நுவலத், 10

தூக்கணம் குரீஇத் தூங்குகூடு ஏய்ப்ப - ஒருசிறைக் கொளிஇய திரிவாய் வலம்புரி, ஞாலங் காவலர் கடைத்தலைக், காலைத் தோன்றினும் நோகோ யானே.

கிள்ளியினிடம் இருந்த படை மிகவும் பெரியது. ஒரு பனைமரத்திலே நுங்கு இருந்த காலத்து முன்னணி வீரர் அதனைக் கடக்கத் தொடங்கினால், இறுதியாக வருபவர் அதனைக் கடந்து செல்லும்போது, பனங்கிழங்கினைச் சுட்டுத் தின்று செல்லுமளவு தொடர்ந்து செல்லும் அத்துணைப் பெரியது அது. அப் படையுடன் உலகை வலம் வந்து வெற்றி கண்ட அவன் நாடெல்லாம், அவன் இறந்த பின்னர், கள்ளி யோங்கிக், களர்நிலமாகி, முள்ளும் நிரம்பிப் புறங்காடாக மாறிவிட்டதே! முரசுடனே சேர்ந்து அவன் வெற்றியை மெல்லென முழக்கிய வலம்புரிச் சங்கம், இன்று தூக்கணாங் குருவிக் கூடுபேரிலத் தூக்கப்பட்டிருப்பதையுங் கண்டேனே! அதே சங்கம், இன்றைய அரசனின் திருப்பள்ளி எழுச்சிக்காக முழங்குகின்றதே! அதைக் கேட்டும் இறந்துபடாது நொந்து கொள்ளும் அளவிலேயே நிற்கின்றேனே யான்! -

226. இரந்து கொண்டிருக்கும் அது! . பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார். பாடப்பட்டோன்ட

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. 4. -

(இறந்தோனது புகழினை அன்புற்று எடுத்துக் கூறுதல் கையறுநிலைத் துறையாகும். வளவனின் ஆண்மை மிகுதியையும், வண்மையினையும் வியந்து இரங்கிக் கூறியவாறாம். காஞ்சித் திணைத் துறைகளுள், கழிந்தோர் தேஎத்துக் கழிபடர் உlஇ, ஒழிந்தோர் புலம்பிய கையறுநிலை’க்கு இளம் பூரணரும் (புறத். சூ.9), 'மன் அடாது வந்த மன்னைக் காஞ்சி'க்கு நச்சினார்க் கினியரும் எடுத்துக் காட்டுவர்) -