பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

237


வளவன் என்னும் வண்டுமூசு கண்ணி இனையோற் கொண்டனை ஆயின், 10

இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே?

நன்றியில்லாத கூற்றமே! நீ மிகவும் பேதைமை உடையை. வித்தினை வித்திப் பெரும் பயன் விளைத்துக் கொள்ளும் ஊக்கம் இல்லாமையால், அவ்வித்தையே குற்றி உண்டாய். இதுவே உண்மை என்பதை இன்னமும் காண்பாயாக போர்க்களத்திலே பேராண்மையுடன் எதிர்வருவார் படைகளையெல்லாம் நின் பசி தீர்த்தற்கு ஊட்டினவன் அவன். வசையற்ற வலிய கொலைத் தொழிலில் நின்னை ஒத்த வல்லாளன் அவ் வளவன். அத் தன்மை உடைய அவனையுங் கொன்றனையே! இனி, நின் பசி தீர்ப்பவர்தாம் யாவரோ? சொல்வாயாக.

சொற்பொருள்: 1. நயன்இல் - ஈரமில்லாத 2 விரகு உபாயம். வித்து மேல் விளைந்து பயன்படும் விதையை. அட்டு - குற்றி, 3. வாய் ஆகல் - மெய்யாதல் 4 ஒளிறு - ஒளி விளங்கிய, மறவரும் வீரரும். குரூஉப்புனல் - நிறமுடைய அழகிய நீர் 8. நின்ஒர் அன்ன - நின்னை ஒத்த நயன் - நியாயமும் ஆம்

228. ஒல்லுமோ நினக்கே!

பாடியவர்: ஐயூர் முடவனார். பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். திணை: பொதுவியல். துறை: ஆனந்தப் பையுள்.

(சுற்றத்தார் இரங்கிக் கூறுதலின் ஆனந்தப் பையுளாயிற்று. அவனுடலுக்குத் தாழி வனைதலைக் கண்டவர். அவனுடைய புகழின் பெருமையைக் குறித்து வியந்து, அதனை அடக்குதற்குத் தாழி வனைதற்கு இயலுமோ? என்கிறார். மன்னர்களைத் தாழியில் இட்டுப் புதைக்கும் மரபும் இதனால் அறியப்படும்)

கலஞ்செய் கோவே! கலஞ்செய் கோவே! இருள்திணிந் தன்ன குரூஉத்திரள் பருஉப்புகை அகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை, நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே! அளியை நீயே, யாங்கு ஆகுவை கொல்? 5

நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப் புலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை. விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந் தன்ன சேண்விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன் கொடிநுடங்கு யானை நெடுமாவளவன் - 1 O