பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

13


யாங்கனம் ஒத்தியோ? வீங்குசெலல் மண்டிலம்? பொழுது என வரைதி; புறங்கொடுத்து இறத்தி, மாறி வருதி, மலைமறைந்து ஒளித்தி, அகல்இரு விசும்பி னானும் பகல்விளங் குதியால், பல்கதிர் விரித்தே. 10 உலகங் காக்கும் மன்னர் பலரும் தத்தம் ஆணைக்கு உட்பட்டது தத்தம் நிலப்பகுதி எனக் கூறும் பொதுச்சொல்லைப் பொறாதவன்; எதிர்த்தார் பலரையும் ஊக்கமுடன் வென்று நிலத்தை விரிவுபடுத்தி ஒப்பற்ற தனியாட்சி நடத்தி வருபவன்; செல்வத்தைப் பேணாது வழங்கும் வண்மையன், எதிர் நின்று வெல்லும் ஆற்றல்மிக்க படைத்துணை உடையவன்; இவன். மிக்க செலவினை உடைய கதிரவனே! இத்தகைய சேரமானுக்கு எவ்வாறு நீயும் ஒப்பாவாய்? பகற்பொழுதுபோதும் என்ற வரையறுத்து அமைபவன் நீ திங்கள் தோன்ற அஞ்சி முதுகிட்டு ஒழிபவன் நீ தெற்கும் வடக்கும் மாறி மாறி வருபவனாதலால் ஒரு நிலையில் நில்லாத தன்மையுடையவன் நீ! மலைக்குப்பின் மறைகின்றாய், பகலில் மட்டும் வானத்திலே தோன்றிப் பல கதிர்களையும் பரப்புகின்றாய். அவனுக்கு ஒருகாலும் நீ ஒப்பாக மாட்டாய் காண்! (தன் நாட்டோடு அமையாது பிறர் நாட்டையும் கைக்கொண்டு தன் நாட்டை விரிவுபடுத்துபவன்; பகைவர் எதிர்த்தால் எதிர் நிற்பவனேயன்றி ஒருபோதும் புறமுதுகு இடாதவன்; நிலையான ஆட்சியுடையவன்; விளங்கிய புகழ் உடையவன் எனச் சேரனைப் புகழ்ந்த்து இது)

சொற்பொருள்: 4, ஒடுங்கா உள்ளம் - சோம்பல் இல்லாத உள்ளம். ஒம்பா ஈகை பொருளைத் தன் நலனுக்காகப் பாதுகாவ்ாது, பலருக்கும் உவப்புடன் வழங்கும் கைவண்மை.

9. ஆற்றுமணலும் வாழ்நாளும்!

பாடியவர்: நெட்டிமையார். பாடப்பட்டோன். பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி திணை: பாடாண். துறை: இயன்மொழி. குறிப்பு: இதனுடன் காரிகிழாரின் ஆறாவது புறப்பாட்டையும் சேர்த்து ஆய்ந்து, இப் பாண்டியனின் சிறப்பைக்

ᏧaᎱᎢᎧüᎢᏧ%. . -

(இச் செய்யுளைப், பொருளின் துய்த்த பேராண் பக்கத்திற்கும், இயன்மொழி வாழ்த்திற்கும் இளம்பூரணனார் எடுத்துக் காட்டுவர் (தொல். புறத். சூ 7, 29 உரை). பூதங்களின் தோற்ற முறைமையைக் கருதி, நிலத்திற்கு முன்னாகிய நீர், 'முந்நீர் எனப்பட்டது. மன்னுயிர் காக்கும் அன்புடை வேந்தர்க்கு