பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

புறநானூறு - மூலமும் உரையும்



தேவர் உலகம் எய்தினன்; ஆதலின், அன்னோற் கவிக்கும் கண்ணகன் தாழி வனைதல் வேட்டனை ஆயின், எனைய தூஉம் இருநிலம் திகிரியாப், பெருமலை மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே? - 15

விரிகதிர் ஞாயிறு விசம்பிலே செல்வதுபோல, உலகெங்கும் நிலவிப் புகழவும் பட்டவன், செம்பியர் மரபினனான கிள்ளி வளவன். அவன் மிகவும் பெரியவன். அவன் தேவருலகம் எய்தினான் என, அவன் உடலினை அடக்கம் செய்யத் தாழி வனைதலை விரும்பி முனைகின்றனை கலம் வனையும் வேட் கோவனே! நின்னால் அது ஒருபோதும் இயலாது. நில வட்டமே சக்கரமாகவும், மேருமலையே மண்ணாகவும் கொண்டு வனைந்தாலன்றி, அப் பெருந்தகையானைக் கவிக்கும் தாழியை நின்னால் வனைதல் முடியவே முடியாது.

சொற்பொருள்: 1. கலம் - அடுகலம். 2. குரூஉத்திரள் - நிறமுடைத்தாய்த் திரண்ட. 3. ஊன்றும் - சென்றுதங்கும். 4. நனந்தலை - அகன்ற இடம் 6 சூட்டிய பரப்பிய

229. மறந்தனன் கொல்லோ?

பாடியவர்: கூடலூர் கிழார். பாடப்பட்டோன் : கோச் சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. திணை: பொதுவியல், துறை: கையறுநிலை. குறிப்பு: அவன் இன்ன நாளில் துஞ்சுமென அஞ்சி, அவன் அவ்வாறே துஞ்சிய போது பாடியது.

('அஞ்சினம் எழுநாள்; வந்தன்று இன்றே என்று வரும் செய்யுள் அடியையும் கருதுக. மேலோர் உலகத்து மகளிர்க்கு உறுதுணையாகித் தன்துணை ஆயம் மறந்தனன்’ என்று கூறுவதும் காண்க. 'அச்சமும் உவகையும் எச்சமின்றி, நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும், காலங் கண்ணிய ஒம்படை' என்னும் பாடாண்திணைத் துறைக்குக் காட்டுவர் இளம் பூரணனார் (தொல், புறத். சூ.30)

ஆடுஇயல் அழல் குட்டத்து

ஆர்.இருள் அரை இரவில்

முடப்பனையத்து வேர்முதலாக்

கடைக் குளத்துக் கயம்காயப்,

பங்குனி உயர் அழுவத்துத், - 5 தலை நாள்மீன் நிலைதிரிய, நிலை நாள்மீன் அதன்எதிர் ஏர்தரத், தொல் நாள்மீன் துறைபடியப்,