பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

புறநானூறு - மூலமும் உரையும்



கோடுகள் உயர்ந்த மலைகள் செறிந்த நாடு முழுவதையும் கொடுப்பினும் அதனை ஏற்றுக் கொள்ளாத பண்பாளன் அவன். அவனுக்காக நடுகல்லை நாட்டி, அதற்குப் பீலியுஞ் சூட்டி, நாராலரிக்கப்பட்ட மதுவையும் சிறிய கலத்திலே படைக்கின் lர்களோ? அதனை அவன் ஏற்றுக் கொள்வானோ? அவனோ மறைந்தான், காலையும் மாலையும் இனி இல்லையாகுக! என் வாழ்நாளும், இனி இல்லாது மறைவதாகுக!

233. பொய்யாய்ப் போக!

பாடியவர்:வெள்ளெருக்கிலையார் பாடப்பட்டோன்: வேள் எவ்வி. திணை: பொதுவியல், துறை: கையறுநிலை.

(விழுப்புண் பட்டு, எவ்விமாய்ந்த நிலைக்கு இரங்கிக் கூறிய செய்யுள் இது)

பொய்யா கியரோ! பொய்யா கியரோ! பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச் சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ! இரும்பாண் ஒக்கல் தலைவன், பெரும்பூண், 5

போர்அடு தானை, எவ்வி மார்பின் எஃகுஉறு விழுப்புண் பல என வைகுறு விடியல், இயம்பிய குரலே.

பாணச் சுற்றத்திற்கு ஒரு பெருந் தலைவனான அந்த எவ்வியது மார்பின்கண், போரிலே வேல் தைத்துப் பட்ட புண்கள் பல’ என, வைகறை விடியலிலே சொல்லுகின்றீர்களே. அவ் வார்த்தை பொய்யாகிப் போக! யானைகளைப் பரிசிலர்க்குத் தரும் 'வ்ஸ்ளலான அகுதை இடத்திலே இருந்தது பொன்புனைந்த ஆழி என்ற சொற்களைப் போல, அச்சொற்களும் பொய்யாகிப் போகுமாக (அகுதை எவ்வியால் போரில் வெல்லப்பட்டவன்.)

சொற்பொருள்: 3. நோன்றாள் - வலிய முயற்சியை. 4. திகிரியின் ஆழிபோல. திகிரி என்றது, திகிரி தைத்தது என்று பிறந்த வார்த்தையை. பொன் - இரும்பு. 8. வைகுறு - சொல்லிய வார்த்தை.

234. உண்டனன் கொல்? t.

பாடியவர்: வெள்ளெருக்கிலையார். பாடப்பட்டோன்: வேள எவ்வி. திணை: பொதுவியல், துறை: கையறுநிலை.

(பலரோடும் உண்டலை மரீஇயோன், பிண்டம் யாங்கு உண்டனன் கொல்?’ என இரங்குகின்றனர்)