பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

புலியூர்க்கேசிகன் . . 247

நிலமாகிப் பாழ்பட்ட புறங்காட்டின்கண்.15. அது நோய் இன்று ஆக கூற்றம் நோயின்றி இருப்பதாக16 ஒற்றிய வீழ்ந்த 18. கடல் மண்டு புனலின் - மண்டிய ஆற்று நீர்போல. -

238. தகுதியும் அதுவே!

பாடியவர்: பெருஞ்சித்திரனார். பாடப்பட்டோன்: இளவெளிமான். திணை: பொதுவியல், துறை: கையறுநிலை.

(வெளிமான் துஞ்சியமைக்கு வருந்திக் கூறியது இது. கரைகாண வியலாத் துயரத்தைக், கண்ணில் ஊமன் கடற் பட்டாங்கு எனக் கூறுதலைக் கவனிக்க)

கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த - செவிசெஞ்சேவலும் பொகுவலும் வெருவா, வாய்வன் காக்கையும் கூகையும் கூடிப் போய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன்; 5

தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென்றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந்தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப, 10

எந்தை ஆகுதல் அதற்படல் அறியேன், அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்னா குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், - ஆரஞர் உற்ற நெஞ்சமொடு, ஒராங்குக் 15 கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன்; தகுதியும் அதுவே.

தாழியினுள் பிணத்தை இட்டு, அதனைக் கவிழ்த்துப் புதைக்க, அதன் மேற்புறத்தே காணப்படும் குவிபுறத்திலே கழுகுக்ளும், பொகுவல் எனும் புள்ளும், அண்டங்காக்கையும், கோட்டானும் கூடிப், பேயினத்தோடு தாம் விரும்பியவாறு எல்லாம் செய்யும் சுடுகாட்டை நோக்கிச் சென்றனன், வீர பானம்

விரும்பும் வெளிமான்! அவனை இழந்து வளைகழிக்கப்பட்ட

மகளிரைப் போலப், பாடுவாரது சுற்றமும் தம் ஒளி மங்கின. முரசுகளோ கண்கிழிந்தன. யானைகள் மருப்பிழந்து விட்டன.