பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

புறநானூறு - மூலமும் உரையும்


இவ்வாறு கூற்றம் கொடுந்துயர் செய்யுமெனவும், எம் தலைவனும் அதற்காற்றாது படுவான் எனவும், யானும் அறியேனே! அந்தோ! யான் உறுதியாக நம்பியன்றோ வந்தேன்! எனது சுற்றம் எத்தகைய துயரம் படுமோ? மழை இரவில், கடலிலே புயலிற்சிக்கி மரக்கலங் கவிழக், கண்ணும் பேச்சும் அற்றவன் (குருடும் ஊமையுமான ஒருவன்) கரைசேர வழி தெரியாது, கூச்சலிடவும் இடமின்றி அமிழ்ந்து சாவதுபோலத், துன்பத்திலே சுழன்று வாடுவதினும் சாதலே நன்று. அதுதான் எம் போன்றோர்க்குத் தகுதியுடையதும் ஆகும்.

சொற்பொருள்: 1. கவிசெந்தாழி - பிணம் இட்டுப் புதைக்கப் பட்ட கவிக்கப்பட்ட செய்ய தாழியினது. 2. பொகுவல் - பறவை வகை. 4. பெட்டாங்கு - விரும்பிய வழியே. 5. கள் காமுறுநன் - வீர பானத்தை விரும்புவோனாகிய வெளிமான். 7. பையென்றன - ஒளி மழுங்கின. 8. தோடு - தொகுதி 19, 'மன் கழிவின்கண் வந்தது.

239. இடுக சுடுக, எதுவும் செய்க!

பாடியவர்: பேரெயின் முறுவலார். பாடப்பட்டோன். நம்பி நெடுஞ்செழியன். திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

(செழியனின் நிலைத்த புகழைக் கூறி, 'அவன் தலையைப் புதைப்பதோ சுடுவதோ எதுவும் செய்வீராக’ என்கின்றனர் புலவர். ஈற்றயலடி நாற்சீரான் வந்த வஞ்சிப்பா இது)

தொடியுடைய தோள்மணந்தனன்;

கடி காவிற் பூச் சூடினன்;

தண்கமழுஞ் சாந்து நீவினன்;

செற்றோரை வழி தபுத்தனன், -

நட்டோரை உயர்பு கூறினன்; 5

வலியரென, வழி மொழியலன்;

மெலியரென, மீக்கூறலன்

பிறரைத் தான் இரப்பறியலன்

இரந்தோர்க்கு மறுப்பறியலன், வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்; 10 வருபடை எதிர் தாங்கினன்;

பெயர்படை புறங் கண்டனன்;

கடும் பரிய மாக் கடவினன்;

நெடுந் தெருவில் தேர் வழங்கினன்; ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன், 15

தீஞ்செறி தசும்பு தொலைச்சினன்; பாண் உவப்பப் பசி தீர்த்தனன்;