பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

புறநானூறு - மூலமும் உரையும்


பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன், கோடுஏந்து அல்குல், குறுந்தொடி மகளிரொடு -

காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப, - 5 மேலோர் உலகம் எய்தினன் எனாஅப், பொத்த அறையுள் போவாய்க் கூகை, "சுட்டுக் குவி' எனச் செத்தோர்ப் பயிரும் கள்ளியம் பறந்தலை ஒருசிறை அல்கி, ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது; - 10 புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது, கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர் வாடிய பசியர் ஆகிப், பிறர் நாடுபடு செலவினர் ஆயினர், இனியே.

போர்க்குதிரைகள், யானைகள், தேர்கள், நாடு, ஊர்கள் ஆகியவற்றை மகிழ்வுடன் பாடுவார்க்கு அளித்த வள்ளல் ஆய் அண்டிரன். அவனையும், அவன் மகளிரையும் கண்ணோட்ட மில்லாத கூற்றுவன் தேவருலகுக்குக் கொண்டு போயினான். அவன் உடம்பும், பேராந்தை சுட்டுக்குவி' என்பதுபோலச் செத்தாரைக் கூவும் கள்ளியம் புறங்காட்டின் ஒருபுறத்தே, ஈமத் தீச் சுட மாய்ந்துவிட்டது. நீர் நிறைந்த கண்ணராகப் புலவர்கள் தம் சுற்றமொடு கலங்கியழுது, பசி வாட்டுதலான், வேற்று நாடுகளை நோக்கிச் செல்லவும் தொடங்கி விட்டனர்! -

சொற்பொருள்: 1. ஆடுநடை - தாளத்திற்கேற்ப நடக்கும்

அசைந்த நடையையுடைய, 3. அருகா - குறைவு அறக்கொடுக்கும்.

10. நைப்ப - சுட 11. புல்லென் கண்ணர் - பொலிவழிந்த கண்ணை யுடையராய்.12. கையழிந்து - செயலற்று.

241. விசும்பும் ஆர்த்தது! பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். பாடப்பட்டோன். ஆய். திணை: பொதுவியல், துறை: கையறுநிலை.

('அண்டிரனை வரவேற்க இந்திரனின் அரண்மனையில் முரசொலி எழுந்தது என, அவன் மறைவை நயத்தோடு, கூறுகின்றனர். நெடியோன்’ என்னும் பெயரால் இந்திரனும் குறிக்கப்படுதலையும் காண்க)

'திண்தேர் இரவலர்க்கு, ஈத்த, தண்தார். 'அண்டிரன் வரூஉம் என்ன, ஒண்தொடி வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள், போர்ப்புறு முரசம் கறங்க, - ஆர்ப்பு:எழுந் தன்றால், விசும்பி னானே. 5