பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

புறநானூறு - மூலமும் உரையும்



அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட - காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது, /* அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம், வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட வேளை வெந்தை, வல்சி ஆகப் பாற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ, 10

பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம் நுமக்குல் அரிது ஆகுக தில்ல; எமக்குஎம் பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற வள்இதழ் அவிழ்ந்த தாமரை நள்இரும் பொய்கையும், தீயும் ஒரற்றே! 15

(. அடகிடை மிகுந்த - புறத்திரட்டு)

“நின் கணவனுடன் நீயும் செல்வாயாக!' என்று சொல்லாது என்னைத் தடுக்கின்ற, பொல்லாத செயல்புரியும் பல்வேறு சான்றோர்களே! வெள்ளரி விதைபோன்ற நெய்யற்ற நீர்ச்சோறு, எள்ளுத்துவை, புளி கூட்டிச் சமைத்த வேளைஇலை ஆகியவற்றை உண்டும், பாயின்றிப் பருக்கைக் கற்கள்மேல் படுத்தும், கைம்மை நோற்கும் பெண்டிர் போன்றோர் அல்லேம் யாம்! ஈமப் படுக்கை நுங்களுக்கு அரிதாகத் தோன்றலாம். எம் கொழுநன் இறந்து பட்டனன்; ஆதலால், எமக்கு அத் தீயே தாமரைக் குளத்து நீர்போல இன்பந் தருவதாகும் என்று அறிவீர்களாக

சொற்பொருள்: 4, அணில்வரிக் கொடுங்காய் - அணிலினது வரிபோலும் வரியையுடைய வளைந்த வெள்ளரிக்காய்.

247. பேரளுர்க் கண்ணள்!

பாடியவர்: மதுரைப் பேராலவாயர். திணை: பொதுவியல். துறை: ஆனந்தப் பையுள். -

(பெருங்கோப்பெண்டு தான் கருதியவாறே தீப்பாய்ந்து உயிர் நீத்தாள். அவளுடைய கற்புறுதி கண்ட புலவர் இவ்வாறு பாடுகின்றார். சிறிது நேரம் பிரிந்திருந்த போதும் தன் இன்னுயிர் நடுங்கும் தன்மையளாக இருந்த அவளது காதற் சிறப்பை நினைந்து போற்றுக) - -

யானை தந்த முளிமர விறகின் கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து; மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி, மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில், நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப், 5