பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

255


பேரளுர்க் கண்ணள், பெருங்காடு நோக்கித்

தெருமரும் அம்ம தானே - தன் கொழுநன்

முழவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச்

சிறுநணி தமியள் ஆயினும், -

இன்னுயிர் நடுங்குந்தன் இளமைபுறங் கொடுத்தே! 10

முற்றத்தில் இழிந்து, நீர் வடியும் கூந்தல் பின்புறத்திலே வீழப், பெரிதும் கலங்கிய கண்ணினை உடையவளாகப், புறங்காட்டைப் பார்த்துப் பார்த்துத் தேம்புகின்றனளே! அவளைக் காணுங்கள்! எந் நேரமும் வெற்றிமுரசம் ஒலிக்கும் தலைநகரின் உள்ளே சென்று வரச் சிறுநேரம் அவன் பிரியுங்காலத்துத் தனித்திருப்பினும், உயிர் தளரும் காதல் மிக்கவள் அவள்! அவள் இளமை அனைத்தும் இப்போது அழிந்ததே ஐயகோ! .

சொற்பொருள்: 1. முளி உலர்ந்த 2. ஞெலிதீ - கடைந்து கொள்ளப்பட்ட எரியாகிய, 9. சிறு நனி தமியள் ஆயினும் - மிகச் சிறிது பொழுது தனித்திருப்பினும், 10. நடுங்கும் - தளரும். 'அம்ம’: அசை.

248. அளிய தாமே ஆம்பல்!

பாடியவர்: ஒக்கூர் மாசாத்தனார். திணை: பொதுவியல். துறை: தாபதநிலை.

(காஞ்சித் திணைத் துறைகளுள், ‘காதலன் இழந்த தாபத நிலை’க்கு மேற்கோள் காட்டுவர் இளம்பூரணர் (தொல். புறத். சூ.19) •

அளிய தாமே சிறுவெள் ளாம்பல்!

இளையம் ஆகத் தழையாயினவே, இனியே,

பெருவளக் கொழுநன் மாய்ந்தென்ப், பொழுது மறுத்து,

இன்னா வைகல் உண்ணும் .

அல்லிப் படூஉம் புல் ஆயினவே.

யாம் இளமையோடிருந்த முன் காலத்திலே எம்மை அழகு செய்யும் தழையாக உதவின இன்றோ, எம் தலைவன் இறந்தானாக, உண்ணுங் காலமும் வெறுத்துத் துயரால் வாடுகின்ற எனக்கு, அல்லியிடத்து உண்டாகும் புல்லரிசியாக உதவுகின்றன, சிறுவெள்ஆம்பல். அதன் நிலையும் இரங்கத்தக்கதே!

சொற்பொருள்: தாபத நிலை - 56T೧/7 இறந்தானென - மனைவி கைம்மை நோன்பு நோற்றல். 1. அளிய இரங்கத்தக்கன. 2. இளையம் ஆக - யாம் இளையேமாயிருக்க தழையாயின முற்காலத்துத் தழையாயுதவின. இனியே - இக்காலத்து. 3. பெருவளம் - பெரிய செல்வத்தையுடைய. பொழுது மறுத்து - உண்ணும் காலம் மாறி. 5. அல்லிப் படும் அல்லியிடத் துண்டாம்.