பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

புறநானூறு - மூலமும் உரையும்



249. சுளகிற் சீறிடம்!

பாடியவர்: தும்பி சொகினனார், தும்பிசேர் கீரனார் என்பதும் ஆம். திணை: பொதுவியல். துறை: தாபத நிலை. (காஞ்சித் தினைத் துறைகளுள் ஒன்றான, தாமே யேங்கிய தாங்கரும் பையுள்’ என்பதற்கு மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல், புறத். சூ. 24 உரை)

கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக், கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ, எரிப்பூம் பழனம் நெரித்துஉடன் வலைஞர் அரிக்குரல் தடாரியின் யாமை மிளிர, பனைநுகும்பு அன்ன சினைமுதிர் வராலொடு, 5

உறழ்வேல் அன்ன ஒண்கயல் முகக்கும், அகல்நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப் பகல்இடம் கண்ணிப் பலரொடும் கூடி, ஒருவழிப் பட்டன்று; மன்னே! இன்றே அடங்கிய கற்பின், ஆய்நுதல் மடந்தை, 10

உயர்நிலை உலகம் அவன்புக.வரி நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி, அழுதல் ஆனாக் கண்ணள்,

மெழுகு, ஆப்பி கண் கலுழ்நீரானே.

'அவனிருந்த நாளிலே பலர் கூட்டத்துடன் இருந்து பந்தி பந்தியாகச் சாப்பிட்டனரே! இன்றோ, அவன் கற்பு மனைவி, கைம்மைக் கோலத்துடன், சுளகு போன்ற சிறு இடத்தைக் கண்ணிர் நனைப்ப, அழுத கண்ணினளாகத் தன் கண்ணிரினாலே சாணத்தைக் கரைத்து மெழுகிச் சோறு வைக்கும் நிலையும் வந்ததே!’

சொற்பொருள்: 1. கதிர் மூக்கு - கதிர் முனைபோலும் மூக்கையுடைய.2. கணைக்கோட்டு - திரண்ட கோட்டையுடைய.3. எரிப்பூம் பழனம் - எரிபோலும் நிறத்தவாகிய தாமரைப் பூவை யுடைய பொய்கைகளை, 5. பனை நுகும்பு - பனங் குருத்து.

250. மனையும் மனைவியும்! பாடியவர்:தாயங் கண்ணியார் திணை: பொதுவியல் துறை: தாபத நிலை.

('கூந்தல் கொய்து, குறுந்தொடி நீக்கி, அல்லியுணவின் மனைவியோடு, இனியே புல்லென்றனையால் வளங்கெழு திருநகர்’ என்று அவள் நிலையை உரைக்கின்றனர்)