பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

15


(நெய்தலங்கான நெடியோய் (12) என அரசனின் பெயர் வந்துள்ளது. வழிபடுவோரை வல்லறிதி' என்பது, அறிந்து அவர்கட்கு அருளுக என்றும் பொருள் தரும்; அவ்வாறு கருதின் இது செவியறிவுறுஉம் ஆகும்) -

வழிபடுவோரை வல்லறி தீயே! பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே; நீமெய் கண்ட தீமை காணின், . ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி, வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின், 5 தண்டமும் தணிதி, பண்டையிற்பெரிதே; - அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில் வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர் மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப! 10

செய்து இரங்காவினைச், சேண்விளங் கும்புகழ் நெய்தலங் கானல் நெடியோய்! எய்த வந்தனம்யாம்; ஏத்துகம் பலவே!

அமுதத்தையும் தன் சுவையால் வெல்லுவதும், உண்ண உண்ணத் தெவிட்டாத மணங்கமழும் தாளிதத்தை உடையதுமான உணவை, வருபவருக்கு எல்லையின்றி வழங்குபவர் நின்தேவியார். வசையில்லாத வாழ்வினரான அவர் தழுவுவதை அல்லாது, மள்ளர் மோதுவதற்கு அஞ்சும், பன்னிற மாலையணிந்த திண்ணிய மார்பனே! ஒன்றைச் செய்து, பின் அதற்காக வருந்தாது, முதலிலேயே செம்மையாக எதனையும் செய்பவன் நீ! நெடுந்தொலை வரைக்கும் பரந்தது நின் புகழ் நெய்தலங் காலத்து நெடியோனே! நின் வழியிலே செல்பவரை விரைவில் உணர்ந்து கொள்பவன் நீ! புறம்கூறுவார் சொற்களை நீ கேட்கவே மாட்டாய்! கொடுமை என்று நின் மனத்திலே முடிவாகக் கருதிய ஒன்றை ஒருவன் செய்யக் கண்டால், முறைவழுவாது நடுநிலைநின்று ஆய்ந்து அவனுக்குரிய தகுந்த தண்டனையை அளிப்பாய். அவனே வந்து நின் திருவடிகளைப் பணிந்து நின்முன் நின்றால், தண்டனையையுங் குறைத்து, முன்னிலும் பெரிதாக அவன்பால் அன்பும் பாராட்டுவாய். நின்னை அடைந்து எம் துயரைத் தீர்த்துக் கொள்ளக் கருதி யாமும் வந்தோம்! நின்னைப் புகழ்கின்றோம் (எமக்கும் அருள்வாயாக என்பது கருத்து)

சொற்பொருள்: 1. வல் அறிதி விரைய அறிவாய். 4. அத்தக

ஒருத்தி தீமைக்குத் தக்கவாறு தண்டிப்பாய் 5 முந்தை நின்முன், பண்டையிற் பெரிது - அவர் பிழை செய்வதற்குமுன் அவர்க்கு நீ