பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

புறநானூறு - மூலமும் உரையும்


செருப்புஇடைச் சிறுபரல் அன்னன், கணைக்கால், அவ்வயிற்று அகன்ற மார்பின், பைங்கண், குச்சின் நிரைத்த குரூஉமயிர் மோவாய்ச், செவிஇறந்து தாழ்தரும் கவுளன்; வில்லொடு, யார்கொலோ அளியன் தானே? தேரின் - 5

ஊர்பெரிது இகந்தன்றும் இலனே; அரண்எனக் காடுகைக் கொண்டன்றும், இலனே; காலைப், புல்லார் இனநிரை செல்புறம் நோக்கிக், கையின் சுட்டிப் பைளன எண்ணிச், சிலையின் மாற்றி யோனே; அவைதாம் 10

மிகப்பல ஆயினும், என்னாம்? எனைத்தும் வெண்கோள்தோன்றாக்குழிசியொடு, நாள்உறை மத்தொலி கேளாதோனே?

செருப்பிடையிலே அகப்பட்ட சிறு கல், செருப்பை அணிந்து செல்வார்க்குத் தீராத வேதனையைத் தருவது போலப், பகைவர்க்குத் தீராத தொல்லைகளைத் தருபவன்; திரண்ட கால்களும், அழகிய வயிறும், அகன்ற மார்பும், பசுமையான கண்களும், குச்சுப்புல் நிரைத்ததுபோன்ற தாடியும், காதளவு பரந்து முன்னே தாழ்ந்த கன்னங்களும் உடையவன்; வில்லோடு விளங்கும் இவன் யாரோ காண்? எண்ணிப் பார்த்தால், ஊரைவிட்டுப் பலகாலம் சென்றிருந்தவனும் அல்லன். பிறருக்கு அஞ்சித் தனக்கு அரணாகக் காட்டிற் சென்று வாழ்பவனு மல்லன். இன்று காலையேதான் பகைவர் ஆநிரை செல்லுமிடத்தைத் தன் கையினாற் சுட்டி மெல்ல எண்ணிக் கொண்டிருந்தான். அடுத்து, அவர்தம் ஆற்றலைத் தன் கைவில்லால் அழித்தும் வென்றான். அவரது ஏராளமான ஆநிரைகளையும் கைப்பற்றிக் கொண்டு வந்தான். எனினும், அவனுக்கு என்ன பயன்? அனைத்தையும் பிறர்க்கு அப்படியே வழங்கிவிட்டானே? அதனால், பாலும் கரந்து காணான், தயிர் கடையும் ஒலியும் அவன் இல்லிலே கேளாது: வறிதேயன்றோ அவன் இருக்கின்றான்! இரங்கத்தக்கதே அவன் நிலை (இகழ்வது போலப் புகழ்ந்தது இது)

258. தொடுதல் ஓம்புமதி:

பாடியவர்: உலோச்சனார். திணை: வெட்சி. துறை: உண்டாட்டு.

(மறவர் கள்ளுண்டு களித்தாடும் செய்தி பற்றிக் கூறுவது இச் செய்யுள். இவன் நிரை கொள்ளச் செல்கின்றமை கண்டார் கள்விலையாட்டிக்குக் கூறியது' என்று கொள்க)