பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

புலியூர்க் கேசிகன் . ~. 263

முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத் தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம் நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு பச்சூன் தின்று, பைந்நிணம் பெருத்த - எச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிரிப் - 5 புலம்புக் கனனே, புல்அணற் காளை, ஒருமுறை உண்ணா அளவைப், பெருநிரை ஊர்ப்புறம் நிறையத் தருகுவன்; யார்க்கும் தொடுதல் ஓம்புமதி முதுகட் சாடி,

ஆதரக் கழுமிய துகளன், 10 காய்தலும் உண்டு, அக் கள்வெய்யோனே!

பகைவரின் ஆநிரை கவர்ந்தான். வரும் வழியிலே வேற்று நாட்டின் கந்தாரம் என்னும் கள் விற்பவரைக் கண்டான். விலையாகப் பசுக்களைக் கொடுத்துக் கள்ளுண்டு களித்தான்; ஊனுண்டும் மகிழ்ந்தான். கைகழுவவும் நினையாது, எச்சிலை வில்லின் மேற்புறத்திலே துடைத்தவாறே, மீண்டும் பகைப்புலம் நோக்கிப் புறப்பட்டு விட்டான். அவனைக் காண்க: இங்கிருப்பவர் ஒருமுறை மதுவுண்டுவிடுமுன்னர், இவ்வூர் நிறைய ஆநிரைகளைக் கவர்ந்து கொண்டு வருபவன் அவன். பிறர்க்கு வார்த்தது போதும்; எஞ்சிய கள்ளை அப்படியே வைத்திருப்பாயாக ஆக்களைத் தெரு வெல்லாம் தூசு எழக் கொணரும் அவன், ஒருக்கால்

வேட்கையுடையவனாக வந்து மதுவை விரும்புதலும் கூடும்.

அதனால், புளித்த பழைய கள்ளுள்ள சாடியைப் பாதுகாத்து அவனுக்காகப் பேணிவைப்பாயாக. - -

சொற்பொருள்: 2. தீம்கந்தாரம் - இனிய கந்தாரம் என்னும் பெயரையுடைய மது வையுடைய வேற்றுப்புலத்து 3.நிறுத்தஆயம் - தாம் கொண்டுவந்து நிறுத்திய நிரையை, 1. காய்தலும் உண்டு - விடாய்த்தலும் உண்டு; விடாய்த்தல் - விடாய்கொள்ளுதல்.

259. புனை கழலோயே! -

பாடியவர்: கோடை பாடிய பெரும்பூதனார். திணை: கரந்தை. துறை: செருமலைதல் (பிள்ளைப் பெயர்ச்சியுமாம்).

(வெட்சியார் உட்கச் செருக்செய்தல் இது. அவரைப் பொருது கொன்றன்றிச் செல்லல் என்பதாம். "ஆபெயர்த்துத் தருதலுக்கு இளம்பூரணர் காட்டுவர் (புறத். சூ. 5)

ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது.

இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்;