பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

புறநானூறு - மூலமும் உரையும்



செல்லல், செல்லல்; சிறக்க நின், உள்ளம், முருகுமெய்ப் புலைத்தி போலத் தாவபு தெறிக்கும் ஆன்மேல்; புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே!

இடையிலே ஒளிவீசும் வாளுடன், வீரக்கழல் ஒலிக்க வரும் வீரனே! போகாதே, சற்றே நில்! ஆநிரை கவர்ந்தனர் மறவர்; நிரையோடு செல்லாது மீட்க வருவாரைக் குறித்துக் காட்டிலே எதிர்நோக்கிக் காத்துமிருக்கின்றனர். வெறியாடும் புலைச்சி போலத் தாவித்துள்ளும் ஆநிரைகளை மீட்டுக் கொள்ளக் கருதி, அவரை எதிர்த்து, நீ இப்போது போதல் வேண்டாம்.

சொற்பொருள்: 2. தலைகரந்திருந்த - தலைமறைத்திருந்த, 3. ஒடுக்கம் காணாய் - ஒடுங்கிய நிலையைக் கருதாய். 5. முருகு மெய்ப்பட்ட தெய்வம் மெய்யின்கண் ஏறிய

260. கேண்மதி பாண!

பாடியவர்: வடமோதங்கிழார். திணை: கரந்தை (பாடாண் திணையுமாம்). துறை: கையறுநிலை. செருவிடை வீழ்தல், கையறு நிலையுமாம்; பாண்பாட்டுமாம்; பாடாண் பாட்டுமாம்.

(கரந்தை மறவனின் சிறப்பைப் பலபடியாகக் கூறிப் போற்றும் செய்யுள் இது. "ஆபெயர்த்துத் தருதலுக்கு நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டுவர். ‘பான கேண்மதி என்றலாற் பாண்பாட்டும் ஆயிற்று)

வளரத் தொடினும், வெளவுபு திரிந்து, விளரி உறுதரும் தீந்தொடை நினையாத் தளரும் நெஞ்சம் தலைஇ மனையோள் உளரும் கூந்தல் நோக்கிக் களர கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப் 5 பசிபடு மருங்குலை, கசிபு, கைதொழாஅக், 'காணலென் கொல்? என வினவினை, வரூஉம் பாண! கேண்மதி, யாணரது நிலையே; புரவுத் தொடுத்து உண்குவை ஆயினும், இரவுஎழுந்து எவ்வம் கொள்வை ஆயினும், இரண்டும், 10 கையுள போலும் கடிதுஅண் மையலே; முன்ஊர்ப் பூசலின் தோன்றித் தன்னுர் நெடுநிரை தழிஇய மீளி யாளர் விடுகணை நீத்தம் துடிபுணையாக, வென்றி தந்து, கொன்றுகோள் விடுத்து, 15