பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

புறநானூறு - மூலமும் உரையும்


செய்யும் அருளினும் பின் செய்யும் அருள் பெரிதாக.7 அட்டு-தன் சுவையால் வென்று. ஆனா உண்ண உண்ண அமையாத குய் அடிசில் - தாளிப்பையுடைய அடிசில், 8. வருநர்க்கு வரும் விருந்தினர்க்கு, 9. மகளிர் மலைத்தலாவது - பெண்டிர் முயக்கத்தால் மார்பணிகளை மாறுபடுத்துவது. மள்ளர் - வீரர். 10. சிலைத்தார் - இந்திர வில்போலும் பன்னிற மலர்களாலியற்றிய மாலை 11. செய்து இரங்கா வினை யென்றது, ஒரு தொழிலைச் செய்து, பின் இவ்வாறு தவறு செய்தோமே என்று அதனை எண்ணி வருத்தம் அடையாத செயல்.

11. பெற்றனர்! பெற்றிலேன்!

பாடியவர்: பேய்மகள் இளவெயினியார். பாடப்பட்டோன்: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ. திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை.

('பாடினி இழை பெற்றாள்; பாணன் பூப்பெற்றான்; யானோ யாதும் பெற்றிலேன்' என அமைதலால் பரிசில் கடா நிலை ஆயிற்று.இது இவர் பேய்வடிவாகப் பிறராற் காணப்பெறாதிருந்த தன்மையான் எனலும் பொருந்தும். நின்னோடு எதிர்த்துப் பட்டோர் இன்மையின், எனக்குத் தசையுணவு கிடைக்கப் பெற்றிலேன்' எனக் கூறியதாகவும் கொள்க) -

அரி மயிர்த் திரள் முன்கை

வால் இழை, மட மங்கையர்

வரி மணற் புனை பாவைக்குக்

குலவுச் சினைப் பூக் கொய்து

தண் பொருநைப் புனல் பாயும் - 5

விண் பொருபுகழ், விறல் வஞ்சிப் பாடல் சான்ற விறல்வேந்தனும்மே, வெப்புடைய அரண் கடந்து, துப்புறுவர் புறம்பெற்றிசினே, புறம் பெற்ற வயவேந்தன், 1O மறம் பாடிய பாடினி யும்மே; ஏர் உடைய விழுக் கழஞ்சின், சீர் உடைய இழை பெற்றிசினே! இழை பெற்ற பாடி னிக்குக் குரல் புணர்சீர்க் கொளைவல்.பாண் மகனும்மே; 15

என ஆங்கு,

ஒள்.அழல் புரிந்த தாமரை வெள்ளி நாரால் பூப்பெற்றிசினே.