பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

புறநானூறு - மூலமும் உரையும்



பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி,
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு,
அணிமயிற் பீலி சூட்டிப், பெயர் பொறித்து
இனிநட் டனரே! கல்லும்; கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல், பாணரது கடும்பே?

கன்றுடனே கறவையையும் மீட்டுத் தந்தவன்; பகைமறவரை ஓடஓட வெருட்டிய நெடுந்தகை; அவனும் போரிலே பட்டான். அதனை அறிந்தும், பாணரது சுற்றம் இன்றும் வருமோ? பீலியும் கண்ணியும் சூட்டிப் பெயரும் பொறித்து. அவனுக்குக் கல்லையும் இப்போது நட்டுவிட்டனரே! ('வருமோ' என்றது, வாராது என்ற உறுதியாற் கூறியது). 265. வென்றியும் நின்னோடு செலவே! பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் திணை: கரந்தை. துறை: கையறுநிலை. ('பரிசிலர் செல்வமும், வேந்தரது வென்றியும், நின்னோடு செல்லக் கல்லாயினையே' எனக் கூறி வருந்துகின்றார். 'கடவுளாகியபின் கண்டது' என உரைக்கும் நச்சினார்க்கினியர் (தொல், புறத். சூ. 5). இதனை நடுகல் வாழ்த்தாகக் கொள்வர்.) ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை, ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீப் போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப், பல்ஆன் கோவலர் படலை சூட்டக், கல்ஆ யினையே - கடுமான் தோன்றல்! வான்ஏறு புரையும்நின் தாள் நிழல் வாழ்க்கைப் பரிசிலர் செல்வம் அன்றியும் விரிதார்க் கடும்பகட்டு யானை வேந்தர் ஒடுங்கா வென்றியும், நின்னொடு செலவே. இன்று ஊருக்குத் தொலைவிலே உள்ள புறங்காட்டிலே, வேங்கைப் பூவைப் பனையோலையாலே அழகாகத் தொடுத்துப், பல ஆநிரைகளை உடைய கோவலர் சூட்டி மகிழ, நீ நடுகல்லாகி விட்டனையே! பரிசிலர் செல்வம் மட்டுமே நின் மறைவாற் போயிற்று; வேந்தரது யானைப் போர்தரும் வெற்றிச் சிறப்புத் தொழிலும் அன்றோ, இனி இல்லாது போயிற்று!