பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

புறநானூறு - மூலமும் உரையும்


27O Hpong)[p - opaqph *-osulio

267, 268. இப்பாட்டுக்கள் கிடைத்தில

269. கருங்கை வாள் அதுவோ! பாடியவர்: ஒளவையார். திணை: வெட்சி. துறை: உண்டாட்டு.

(வெட்சி மறவரது உண்டாட்டுப் பற்றிக் கூறும் செய்யுள் இது. 'கடிந்து மாறு பெயர்ந்தது இக் கருங்கை வாளே எனத் தலைவனது போராண்மையையும் காட்டுகின்றனர்) -

குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல் பயிலாது அல்கிய பல்காழ் மாலை மையிரும் பித்தை பொலியச் சூட்டிப், புத்தகல் கொண்ட புலிக்கண் வெப்பர் ஒன்றுஇரு முறையிலிருந்து உண்ட பின்றை, 5

உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப் பிழிமகிழ் வல்சி வேண்ட, மற்றிது கொள்ளாய் என்ப, கள்ளின் வாழ்த்திக் கரந்தை நீடிய அறிந்துமாறு செருவின், பல்லான் இனநிரை தழீஇய வில்லோர்க், 10

கொடுஞ்சிறைக் குரூஉப்பருந்து ஆர்ப்பத், தடிந்துமாறு பெயர்த்தது, இக் கருங்கை வாளே.

வெம்மையான கள்ளை ஒருமுறைக்கு இருமுறையாக இருந்து மிகவும் உண்டனை! அதுபோது, வெட்சிகொள்க வெனக் கொட்டும் துடியின் ஒலி எழுந்தது. கேட்டு எழுந்த நீ வடித்த கள்ளினை ஏந்தி உண்கவென நிற்பார் வேண்டியும், அதனை வாழ்த்தி உடனே போருக்கு எழுந்தனை. கரந்தையாரோ மிகப் பலர் மறைந்திருந்தும் போர் செய்தனர். எனினும், அம் மறவர்கள் அனைவரையும் வெட்டி வெட்டி வீழ்த்தி, அவர் ஆநிரைகளைப் பற்றிக் கொண்டு நீ மீண்டனை என்றனர். பெருமானே! நீ அவரைத் தடிந்த வாள், பெரிதாக விளங்கும் இக் கைவாள் தானோ!

சொற்பொருள்: 1. அதிரல் - புனலிக் கொடியினது; கொடி வகைகளில் கொடிப் புன்கு என்பதொரு கொடி இதனைக் காட்டுமல்லிகை என்றும் கூறுவர். நிரம்பப் பூவாது கொடியின் ஒரோவழிப் பூத்திருத்தலின், பயிலாது அல்கிய பூ என்றார்.

270. ஆண்மையோன் திறன்!

பாடியவர்: கழாத்தலையார். திணை: கரந்தை. துறை: கையறுநிலை.