பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

புறநானூறு - மூலமும் உரையும்


தான் களத்தில் பட்டு வீழ்ந்தோனாகிய ஒரு மறவனின் மாண்பு கூறுவது இச் செய்யுள்)

நீலக் கச்சைப் பூவார் ஆடைப், பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து; இனியே, தன்னும் துரக்குவன் போலும், ஒன்னலர் எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக், 5

கையின் வாங்கித் தழிஇ, மொய்ம்பின் ஊக்கி, மெய்க்கொண் டனனே!

பூத் தொழில் நிரம்பிய ஆடையுடன், நீலநிறக் கச்சையை இறுக்கிக் கட்டிப்பீலிக் கண்ணியும் சூடிப்போருக்குச் சென்றனன், பெருந்தகையாளனான மறவன். களத்திலே அவனைக் கொல்ல வந்த களிற்றின் நெற்றியிலே தன் கைவேலை எறிந்து அதனைக் கொன்று வீழ்த்தினான். அது கண்ட பகைமறவன் ஒருவன் குதிரையோடு வேகமாக அவனை நோக்கி வந்தனன். அது கண்டும் அஞ்சானாகித், தன் கையாலேயே அவனைப் பற்றி இறுக்கி, மேலே தூக்கி மோதி, அவன் உடலை மண்ணில் வீழ்த்தினான். என்னே அவ் வீரனின் மற நெஞ்சம்!

சொற்பொருள்: 1.பூவார் ஆடை-பூத் தொழில் செய்யப்பட்ட ஆடை, 5. எஃகு உடை வலத்தர் - வேலை வலக் கரத்தில் ஏந்தினவராய். பரத்தர பரந்துவரக் கண்டு.

275. தன் தோழற்கு வருமே!

பாடியவர்: ஒருஉத்தனார். திணை:தும்பை, துறை: எருமை மறம்.

(இச் செய்யுளும் முன்னதைப் போன்றதே. பகைவரை எதிர்த்துநின்று போரிட்டுத் தளரும் தன் தோழனைக் காத்தற்கு விரைந்து சென்றோனாகிய ஒரு மறவனைப் பற்றிய செய்தி இது. 'ஒருவன் ஒருவனை உடைபடப் புக்குக் கூழைதாங்கிய எருமை’ என்பதற்கு இளம்பூரணரும் (தொல், புறத் சூ, 14),) 'தானை நிலைக்கு நச்சினார்க்கினியரும் (தொல். புறத். சூ.17) எடுத்துக் காட்டுவர்) -

கோட்டம் கண்ணியும், கொடுந்திரை ஆடையும், வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும், ஒத்தன்று மாதோ, இவற்கே, செற்றிய திணிநிலை அலறக் கூவை போழ்ந்து, தன் வடிமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி, - 5