பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

புறநானூறு - மூலமும் உரையும்


மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை, யானை எறிந்து, களத்துஒழிந் தனனே, - நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன் 5 பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட்டனனே, இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி, வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப், பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி, ஒருமகன் அல்லது இல்லோள், 10

செருமுக நோக்கிச் செல்க என விடுமே

என்னே, இவள்தன் உள்ளத் துணிவு! அது கெடுவதாக, நினைக்கவே அச்சம் தருகின்றதே! 'பழைய மறக்குடி மகள் இவள் என்பதும் பொருத்தமானதே! முன்னர் நடந்த போரிலே இவள் தகப்பன் யானையை வென்று அதன் காரணமாகக் களத்திலே இறந்தனன். நேற்றைய சண்டையிலோ, இவள் கணவன் திரளான ஆநிரைகளைக் காத்து, அப் போரிலே இறந்தனன். இன்றும், போர்ப்பறை கேட்டுக் களத்திலே தன் குடிப்பிறந்தாரும் போரிட வேண்டுமென்று எண்ணி, அறிவுமயங்கிய இவள், என்ன செய்கிறாள்? ஒரே மகனன்றி வேறு பிள்ளைகள் இல்லாத இவள், அவன் குடுமிக்கு எண்ணெய் தடவி, வெள்ளாடை உடுத்துக், கையிலே வேலையும் எடுத்துக் கொடுத்துப், போர்முனை நோக்கிச் செல்க' எனப் போகவிடுகின்றனளே! என்னே இவள் பண்பு (உடுஇ, நீவி, கொடுத்து என்பன, அவன் மிக்க சிறு வயதுடையோன், களஞ்செல்லற்காகாச் சிறுவன் எனக் காட்டுவதாம்.) - f

280. வழிநினைந்து இருத்தல் அரிதே' பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார். திணை: பொதுவியல், துறை: ஆனந்தப் பையுள்.

(தலைவனை இழந்த காலத்து, அவனால் ஆதரிக்கப்பெற்ற பலரையும் குறித்து, அவர் நிலைக்கு இரங்கித் தலைவி வருந்து கின்றாள். ஆனால் அவள் இறந்து உடன்செலத் துணிந்தாள். ஆதலின், ' கழிகல மகளிர்போல வழிநினைந்திருத்தல் அரிதே' என்கின்றனள்) -

என்னை மார்பிற் புண்ணும் வெய்ய, நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்; நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா; துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்; - அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்; - 5