பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

புலியூர்க்கேசிகன் . 279

நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா, துடிய பாண! பாடுவல் விறலி! என்ஆ குவிர்கொல்? அளியிர்; நுமக்கும் இவண்உறை வாழ்க்கையோ, அரிதே! யானும் 10

மண்ணுறு மழித்தலைத், தெண்ணி வாரத்,

தொன்றுதாம் உடுத்த அம்பகைத் தெரியல்

சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்

கழிகல மகளிர் போல,

வழிநினைந்து இருத்தல், அதனினும் அரிதே' 15

அவன் மார்பிலே பட்ட புண்ணோ பெரித்ாயுள்ளது. வண்டுகள் வந்து மொய்க்கின்றனவாதலால், வீட்டிலே ஏற்றிவைத்த விளக்கும் எரியாது அடிக்கடி அவிகின்றது. உறங்காது, அவனருகே பலநாள் இருந்த என் கண்களோ தாமாகவே மூடுகின்றன. அதோ கூகையும் கூவுகின்றது. நெல்லும் நீரும் எறிந்து, இவன் பிழைப்பான் என்று சொல்லிய செம்முது பெண்டின் சொல்லும் குறைபாடாகின்றதே!துடி கொட்டுபவனே! பாணனே! விறலியே! இனி, நீங்கள் என்ன ஆவீர்களோ? இனி

இங்கிருந்து வாழ்தல் நுமக்கு அரிது. மொட்டையிட்டு அல்லியரிசி

உண்டு வாழும் கழிகல மகளிரைப்போலச், சாவின் வழியை எதிர்நோக்கிக் காத்திருத்தல் எமக்கும் அரிது! அவன் இறப்பு நெருங்கிக் கொண்டே வருகிறது! யானும் அவனுடன் சாகப் போகின்றேன்! நீங்கள் வேறிடம் சென்று வாழ்வீராக! (கணவன் சாவை நொடிக்குநொடி எதிர்நோக்கும் மனைவியின் துயர நெஞ்சத்தை இப் பாடலிலே காண்கிறோம்.)

281. நெடுந்தகை புண்ணே!

பாடியவர்: அரிசில் கிழார். திணை: காஞ்சி. துறை: பேய்க் காஞ்சி. -

('நெடுந்தகை புண்பட்டான்; அவனைப் பேய் தாக்காமற்

படிக்கு காப்போம் என்று கூறுவதாக அமைந்த செய்யுள் இது.

வஞ்சித்திணைத் துறைகளுள், ‘இன்னகை மனைவி பேஎய் புண்ணோன் துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சி'க்கு இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் (தொல் - புறத், சூ, 19)

தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ வாங்குமருப்பு யாழொடு பல்இயம் கறங்கக் கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி; ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி, இசைமணி'எறிந்து, காஞ்சி பாடி, 5