பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

புறநானூறு - மூலமும் உரையும்



நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக், காக்கம் வம்மோ - காதலந் தோழி! வேந்துறு விழுமம் தாங்கிய பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே!

இரவ இலையினையும் வேப்பிலையினையும் மனை இறைப்பிலே செருகுவோம். பல இசைகளும் யாழோடு முழங்குக. மெல்லக் கையைப் பெயர்துக் கண்ணுக்கு மை எழுதுவோம். ஆம்பற் குழலினை ஊதி, வெண்கடுகு சிதறி, மணிகள் இசை முழங்கக், காஞ்சிப் பண் பாடியாடுவோம். வீடெல்லாம் அகிற்புகை மணம் சேர்ப்போம். அன்புமிக்க தோழியே! வேந்தனுக்கு உற்ற துயர் தீர்த்தவன் அவன்; அவனே எம் தலைவன்! ஆனால், வீரக்கழல் முழங்கவரும் அவன், அப் போரிலே பெரும் புண் பட்டான். அவன் புண்ணுக்கு மருந்திட்டுக் கூற்றுவந்து கொண்டுபோகாதவாறு அவனை யாம் காப்போம் வருவாயாக!

282. புலவர் வாயுளானே!

பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ. திணையும் துறையும் தெரிந்தில. -

(தன் மன்னனுக்காகப் போரில் சிறந்த செயலாற்றி மடிந்த ஒரு மாமறவனை நினைந்து பாடிய செய்யுள் இது. ‘புலவர் வாயுளான்' என்று அப் புகழாளனைக் குறிக்கின்றனர்)

எஃகுஉளம் கழிய இருநில மருங்கின்

அருங்கடன் இறுத்த பெருஞ்செயாளளை, யாண்டுளனோ? வென, வினவுதி ஆயின்,

வருபடை தாங்கிக் கிளர்தார் அகலம் 5 அருங்கடன் இறுமார் வயவர் எறிய, உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே, மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத்

அலகை போகிச் சிதைந்து வேறு ஆகிய 10

பலகை அல்லது, களத்துஒழி யாதே; சேண்விளங்கு நல்லிசை நிறீஇ, நாநவில் புலவர் வாய் உளானே.

பகைவர் எறிந்த வேல் நெஞ்சிலே பாய, இவ்வுலகிற் பிறந்த கடனை நாட்டுக்காக வீழ்ந்து தீர்த்துக்கொண்ட அப் பெருஞ் செயலாளன் எங்குள்ளான் எனக் கேட்பீராயின். எதிரிகள் புறமிட்டுத் திடுமென மாறி எதிர்த்தனர். அப்போது அவரை