பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

புறநானூறு - மூலமும் உரையும்


மீண்டும் போருக்கு எழும் எண்ணமுடன், தும்பைப்பூக் கண்ணியைத் தன் நெற்றியிலே கட்டினான்! என்னே அவன் மற நெஞ்சம்!

- 284. பெயர்புற நகுமே!

பாடியவர்: ஒரம் போகியார். திணை: தும்பை. துறை: பாண்பாட்டு.

(இதுவும் முன் செய்யுளைப் போன்றதே. வஞ்சித் திணைத் துறைகளுள், அழிபடை தட்டோர் தழிஞ்சி'க்கு இளம் பூரணரும் (தொல், புறத். சூ.7), "வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை’ என்பதற்கு, நச்சினார்க்கினியரும் எடுத்துக் காட்டுவர் (புறத் சூ.13)

'வருகதில் வல்லே; வருகதில் வல்' என,

வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப,

நூலரி மாலை சூடிக், காலின்,

தமியன் வந்த மூதி லாளன்,

அருஞ்சமம் தாங்கி, முன்னின்று எறிந்த 5

ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத் திரிந்த வாய்வாள் திருத்தாத், தனக்குஇரிந் தானைப் பெயர்புறம் நகுமே. 'விரைந்து வருக! விரைந்து வருக!' என, வேந்தனிட்ட தூதுவர் வந்து ஆங்காங்கே அழைக்க, நூலரிமாலை சூடிக் காலால் நடந்து, தான் ஒருவனாகவே வந்தான் அவ் வீர மறவன். அவன் வீரம் கேண்மின் வருபவரை முன்னேறாதவாறு தடுத்து, முன்னின்று போராடிய பகைவரின் கொல்களிற்றை வெட்டி வீழ்த்தி, அங்கே பிணமாக்கினான். அதன் பற்களிலே சிக்கி வளைந்த தன் வாளை நிமிர்த்துக் கொண்டு அவன் திரும்பினான். அப்போது அவன் ஆற்றல் கண்டு எதிர் நிற்க அஞ்சிய பகைவன் ஒருவன் ஒடிக்கொண்டிருந்தது கண்டு, ஆங்கிருந்தே வீரநகை செய்து நின்றவனன்றோ அவன்!

285. தலைபணிந்து இறைஞ்சியோன்! பாடியவர்: அரிசில் கிழார். திணை: வாகை. துறை: சால்பு முல்லை.

(பகைவரைக் கொன்று ஆரவாரித்த ஒரு வீர மறவனின் சிறப்பைச் செய்யுள் எடுத்துக் கூறுகின்றது. அவன் இரவலர்க்கு வழங்கும் வள்ளன்மையும் கொண்டவன். ஆதலின், அவர் அவன் வெற்றியைக் குறித்து வருந்துகின்றனர். செய்யுளின் அமைதியை