பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

283


நோக்கினால், தகடூர் பொருது வீழ்ந்த அதியமான் நெடுமான் அஞ்சியை குறித்துப் பாடிய செய்யுள் இதுவெனலாம்)

பாசறை யீரே! பாசறை யீரே! துடியன் கையது வேலே; அடிபுணர் வாங்குஇரு மருப்பின் தீந்தொடைச் சீறியாழ்ப் பாணன் கையது தோலே, காண்வரக் கடுந்தெற்று மூடையின்........ 5

வாடிய மாலை மலைந்த சென்னியன்; வேந்துதொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு நெடுநகர் வந்தென, விடுகணை மொசித்த மூரி வெண்டோள்.............. - - சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ! 10

மாறுபடு நெடுவேல் மார்புளம் போக; நிணம்பொதி கழலொடு நிலம் சேர்ந்தனனே, அதுகண்டு, பரந்தோர் எல்லாம் புகழத் தலைபணிந்து இறைஞ்சி யோனே, குருசில் - பிணங்குகதிர் அலமரும் கழனித் தண்ணடை ஒழிய, 15

இலம்பாடு ஒக்கல் தலைவற்குஓர்

கரம்பைச் சீறுர் நல்கினன் எனவே,

பாசறையிலுள்ளவர்களே, கேண்மின் வேலும் கேடயமும் நம்பாலும் இருந்தென்ன? துடியனிடம் வேலையும் பாணனிடம் கேடயத்தையும் தந்துவிடுவோம். நெருங்க அடுக்கிய மூடைகளைப் போலப் பகைவரைக் கொன்று கொன்று குவித்தான் அவன். அவ் வெம்மையால், அவன் மாலையும் வாடிற்று. அதுகண்டு ஆற்றாரான பகைவர், அவன் மீது அம்பும் வேலும் எறிந்தனர். நகருக்கு வேந்துவர, உடன் வரும் மந்திரச் சுற்றம்போல, வேல் நெஞ்சைப் பிளந்து செல்லக் கணைகள் சூழத் தைத்தன. நிலம் குருதிச் சேறுபட அச் செம்மலும் நிலத்திலே வீழ்ந்தான். அதுகண்டு அங்கிருந்த சான்றோர் பலரும் அவனை நெற் கழனிகள் அனைத்தும் பரிசிலர்க்கு வழங்கிப், பின் வந்த இரவலர்க்குக் கரம்பைச் சிற்றுறும் தந்த வள்ளல் இவன் எனப் புகழத், தன் புகழ் கேட்டு நாணி, அவனது கவிழாத தலையும் அப்போது கவிழ்ந்துவிட்டதே! அவனன்றோ வீர மறவன்!

286. பலர்மீது நீட்டிய மண்டை! பாடியவர்: ஒளவையார். திணை: கரந்தை. துறை: வேத்தியல்.

(அரசனது மேம்பாட்டைக் கூறுவது இத் துறை ஆகும். அரச குமரன் ஒருவன் களத்துப்பட்ட ஞான்று பாடியதாகக் கொள்க. தகடூர்ப் பெரும் போரிடை வீழ்ந்தோன் அவன் ஆகலாம்)