பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

புறநானூறு - மூலமும் உரையும்



வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத் தன்னோர் அன்ன இளையர் இருப்பப், பலர்மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக் கால்கழி கட்டிலிற் கிடப்பித், துவெள் அறுவை போர்ப்பித் திலதே! 5

வெள்ளையுள்ளம் கொண்ட வெள்ளாட்டுக் கிடாய்களைப் போல, என் மகனான இவனை ஒத்த ஏவலிளைஞரான வீர மறவர் பல சூழ இருப்பினும், உண்டாட்டு நாளில் வேந்தன் பலருக்கும் வழங்கிய கள்ளினைத் தானும் பெற்ற இவன், அவரெல்லாம் போரிலே சென்றுபடத், தான் ஒருவன் மட்டுமே அவர்போல் களத்திலே மடிந்து செல்லாது, வெற்றியுடன் மீண்டும் வந்தான். வேந்தன் வழங்கிய கள் அத்தகைய ஒப்பற்ற நிலையைத் தந்ததே!

287. காண்டிரோ வரவே!

பாடியவர்: சாத்தந்தையார். திணை: கரந்தை. துறை:

நீண்மொழி.

(வீரன் ஒருவன் களத்திலே நின்று, மாற்றாரை வென்று வருவதாகக் கூறும் சபதத்தை உரைப்பது இத் துறையாகும். வஞ்சித்திணைத் துறைகளுள் ஒன்றான, 'மாராயம் பெற்ற நெடுமொழி என்பதற்கு இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் (தொல், புறத். சூ. 7) -

துடி எறியும் புலைய!

எறிகோல் கொள்ளும் இழிசின!

கால மாரியின் அம்பு தைப்பினும்,

வயல் கெண்டையின் வேல் பிறழினும்,

பொலம்புனை ஓடை அண்ணல் யானை 3. 5

இலங்குவாள் மருப்பின் நூதிமடுத்து ஊன்றினும், ஒடல் செல்லாப் பீடுடை யாளர் நெடுநீர்ப் பொய்கை பிறழிய வாளை நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும், தண்ணடைபெறுதல் யாவது? படினே; 10 மாசில் மகளிர் மன்றல் நன்றும், உயர்நிலை உலகத்து, நுகர்ப; அதனால்

வம்ப வேந்தன் தானை

இம்பர் நின்றும் காண்டிரோ, வரவே!

துடி எறிபவனே! எறிகோல் கொள்ளுபவனே! கேண்மின்: கார்கால மழைத்தாரைபோல அம்புகள் வந்து தைப்பினும்,