பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

புறநானூறு - மூலமும் உரையும்


அறனோ மற்று.இது விறல்மாண் குடுமி

இன்னா ஆகப் பிறர் மண கொண்டு

இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே!

பாணர் பொற்றாமரைப் பூச் சூடினர். புலவர்கள் யானையும் தேரும் பெற்றனர். வெற்றிச் சிறப்பு உடைய குடுமியே! வேற்றரசர் நிலத்தை அவர்க்கு உரிமையற்றதாக்கி நீ கவர்ந்து கொள்ளு கின்றாய். ஆனால், நின்பால் வரும் பரிசிலர்க்கு மட்டும் இனிய வற்றையே செய்து வருகின்றனை. அதுதான் நின் அறநெறியோ? (அவன் அறத்தை இகழ்வது போல், அவன் வீரத்தையும், வள்ளன்மையையும் புகழ்ந்தது)

சொற்பொருள்: 1. மலையவும் சூடவும். 2. பண்ணவும் ஏறுதற்கு ஏற்ப அமைக்கவும். 5. ஆர்வலர் - பகைவர்.

13. நோயின்றிச் செல்க!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். பாடப்பட்டோன்: சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி. திணை: பாடாண். துறை: வாழ்த்தியல்.

(கருவூர் வேண்மாடத்திலிருந்த காலத்து, ஊர்ந்து வந்த யானை மதம் பட்டதனால் கருவூருள் வந்தடைந்த சோழனைக் காட்டி, இவன் யார்?' எனச் சேரமான் கேட்பப், புலவர் கூறியது இச் செய்யுள். களிறு கையிகந்து பகையகத்துப் புகுந்தமையால் அவற்குத் தீங்குறும் என்று அஞ்சி வாழ்த்தினர்; அதனால் வாழ்த்தியல் ஆயிற்று. அன்றி, இவற்கொரு தீங்காயின், நமக்குத் தீங்கு வந்துறும் எனும் கருத்தால், 'நோயிலன் ஆகிப் பெயர்க’ என்றாராயின், வாழ்த்தியல் ஆகாது. இதனாற் புலவரது சொற்றிறமும் சால்பும் காணப்படும்) -

‘இவன் யார்?' என்குவை ஆயின், இவனே, புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய, எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின், மறலி அன்ன களிற்றுமிசை யோனே; களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும், 5 பன்மீன் நாப்பண் திங்கள் போலவும், சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப, மரீஇயோர் அறியாது, மைந்துபட் டன்றே; நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம பழன மஞ்ஞை உகுத்த பீலி 10