பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

புறநானூறு - மூலமும் உரையும்


கிடக்கும் கருநிறத்தோனான எம் தோழனை மொய்க்கும் பறவைகளை வெருட்டுங்கள். யானும், விளரி பாடி வெண்ணரிகளை வெருட்டுவேன். வேந்தன் பொருட்டு வெறிதாக உயிர் நீத்தான் அவன்! தன் மாலையை அவனுக்கு அணிந்து, அவன் மாலையைத் தான் அணிந்து, அந் நாள் போற்றிய வேந்தனும் அவன் நிலைகண்டு துயருறுவான்! எனவே, நீவிர் விரைந்து . அவனிடத்தே செல்வீராக! -

292. சினவல் ஓம்புமின்!

பாடியவர்: விரிச்சியூர் நன்னாகனார். திணை: வஞ்சி. துறை: பெருஞ்சோற்று நிலை.

(அரசன் தன் வீரருக்குப் பெருஞ்சோறளித்துப் பாராட்டுகின்றான். அவ்விடத்து, வீரஞ்செறிந்த ஒருவனைச் சுட்டிப் பாடிய செய்யுள் இது. ‘எழுதரு பெரும்படை விலக்கி, ஆண்டு நிற்கும் ஆண் தகை'. என, அப் பெருவீரனின் மறமாண்பைக் கூறுகின்றனர்)

வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம் யாம்தனக்கு உறுமுறை வளாவ, விலக்கி, 'வாய்வாள் பற்றி நின்றனன் என்று, சினவல் ஓம்புமின் சிறுபுல் லாளர்! ஈண்டே போல வேண்டுவன் ஆயின், 5

என்முறை வருக என்னான், கம்மென எழுதரு பெரும்படை விலக்கி, ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே.

சிறு புல்லாளரே! “வேந்தனுக்குத் தயாரித்த இனிய குளிர்ந்த மதுவை, யாம் இவனுக்கு ஏற்ற முறையிலே வளாவித் தருவதற்குள் பொறுக்காது சினந்து,தன் கைவாள் பற்றி நின்றான் இவன்” என்று சினம் அடையாதீர் இங்கே. நடந்தது போலவே, அவன் விரும்பினால், 'என் முறை வருக என்று அமையாது, தானே விரைந்து முற்படச் சென்று பகைவர் பெரும்படையை விலக்கி, அவரை வென்றிகொண்டு நிற்கும் ஆற்றல் மிக்கவனன்றோ அவன்!

சொற்பொருள்: 2. உறுமுறை வளாவ-உற்ற முறையாற் கலந்து கொடுக்க, 3. வாய்வாள் - தப்பாத வாள். 4. சினவல் ஒம்புமின் இவனை வெகுளாது விட்டொழிவீராக. 5. சிறுபுல்லாளர் - சிறிய புல்லாண்மையை உடையவர்களே.