பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

289


- 293. பூவிலைப் பெண்டு!

பாடியவர்: நொச்சி நியமங்கிழார் திணை: காஞ்சி. துறை: பூக்கோட் காஞ்சி.

(வீரன் தான் கொள்ளும் திணைக்குரிய பூவைக் கொள்ளு தலைக் குறித்தது இத் துறையாகும். போர்ப்பறை கேட்டவுடன் புறப்படாமல், பூக்கோட் பறை அறையப்படும் காலத்து எல்லைவரையும் எவ் வீரரும் காலந்தாழ்த்து இரார் என்பதும் கருதுக! அவ்வாறு தாழ்த்துச் செல்வாரை நாணுடை மாக்கள்' என்கின்றனர். ‘நாணம் ஆண்மைக்கு ஏலாது என்பதனையும் இங்கே நினைக்கவும்),

நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன் குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின், எம்மினும் பேர்எழில் இழந்து, வினைஎனப் பிறர்மனை புகுவள் கொல்லோ? 5

அளியள் தானே, பூவிலைப் பெண்டே!

குத்துக்கோலுக்கும் அமையாது காயும் கொடிய யானை மேலிருப்போன், அரண் சூழ்ந்த பகைவரை யழிக்க மறவர்களைப் போருக்கு அழைத்துக், காஞ்சிப் பூச்சூடி வருமாறு ஒலிக்கும் தண்ணுமை ஒலியும் கேட்டது. வீரர்கள் போர்க்கு எழுந்தனர். அவ்வொலி, நாணுடைய மாக்கட்கு இரங்குமாயின், எம் கணவன் போர்க்குச் செல்லப் பூச்சூடாது வருந்தும் எம்மினும், பூ வாங்குவாரின்றித் தன் எழில் குன்றியவளாகச் செல்லுகின்றாளே பூவிலைப் பெண்டு, அவட்கு இரங்குக! என் வீட்டைப் போன்று பிறர் மனையும் வறிதே புகுந்து அவள் துயரேதான் அடைவாளோ? அவள்தான் இரக்கத்திற்குரியவள்!

சொற்பொருள்: 1. நிறப்புடைக் கொல்கா யானை மேலோன் - குத்துக்கோலைக் காய்தலையுடைய யானையின் மேலுள்ளா னாகிய வள்ளுவன். நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன்’ எனப் பாடம் கொண்டு, குத்துக் கோற்கு அடங்காத யானை மேலிருப்போனாகிய வள்ளுவன் எனவும் பொருள் கொள்வர்.

294. வம்மின் ஈங்கு! பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார். திணை: தும்பை. துறை: தானை மறம்.