பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

293


298. கலங்கல் தருமே!

பாடியவர்: ஆலியார், (ஆனியார், ஆவியார்) திணை: கரந்தை துறை: நெடுமொழி.

(“நீ முந்து என்று பிறரை ஏவான்; தானே முற்பட்டுப் பகைவர் மேற்செல்வான்” என்று ஒருவனது மறமாண்பைக் கூறுகின்றது செய்யுள். அவன் இன்னான் ஆகியது, 'நீமுந்து' என்ன்ாமல், தானே முற்படச் சென்றதனால், இதனால் அவ் வீரனின் மறமாண்பு விளங்கும்)

எமக்கே கலங்கல் தருமே தானே தேறல் உண்ணும் மன்னே நன்றும் இன்னான் மன்ற வேந்தே, இனியே நேரார் ஆரெயில் முற்றி, வாய் மடித்து உரறி 'நீ முந்து? என் னானே. 5

தெளிந்த கள்ளைத் தான் பருகிச் சுவைமிக்க கலங்களை எமக்குத் தரும் இனிய பண்பினன். இப்போது, பகைவரின் காவ லரண்களை முற்றுகையிட்டவனாக, இதழ்களை மடித்து முழக்கமிட்டு, 'நீ முந்திச் செல்' என்று எம்மை ஏவாது தானே முற்படச் செல்லுகின்றானே! இதுவோ அவன் அன்பு.

299. கலம் தொடா மகளிர்! Z பாடியவர்: பொன் முடியார். திணை: நொச்சி. துறை: குதிரை மறம்.

(தலைவனது குதிரையானது பகைப்படையினை ஊடறுத்துப் பாய்ந்து சென்ற அந்தச் சிறப்பினைக் கூறுகின்றது செய்யுள். மாற்றாரின் குதிரைகள் ஒதுங்கி நின்ற நிலையை, 'அணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிரது நிலைக்கு உவமிக்கின்றனர் ஆசிரியர். இப் புலவரது காலத்தைக் கருதின், இச் செய்யுளும் தகடுர்ப் போரிடையே ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பதாகக் கொள்ளப்படுதல் பொருந்தும்)

பருத்தி வேலிச் சீறுர் மன்னன் உழுத்து.அதர் உண்ட ஓய்நடைப் புரவி, கடல்மண்டு தோணியின், படைமுகம் போழ, நெய்ம்மிதி அருந்திய, கொய்சுவல் எருத்தின், தண்ணடை மன்னர், தாருடைப் புரவி', 5 அணங்குஉடை முருகன் கோட்டத்துக் கலம்தொடா மகளிரின், இகழ்ந்துநின்றவ்வே.

(1. கோணடை மன்னர் தாருடைக் கலிமான் - வேறுபாடம்)