பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

புறநானூறு - மூலமும் உரையும்



பருத்திவேலி சூழ்ந்த சிறந்த ஊருக்குரிய மன்னனின், உழுத்த உமியைத் தின்று கொழுத்த நடையுடையதான குதிரையானது, கடலைக் கிழித்துச் செல்லும் தோணியைப் போலப் பகைவர் படைமுகத்தைக் கிழித்துச் செல்ல, நெய்யிட்ட உணவை உண்ட பகைமன்னரின் குதிரைகள் எல்லாம், முருகன் கோயிலிலே புகுந்த தூய்மையற்றார் கலந்தொடற்கு அஞ்சினராக ஒதுங்கி நிற்றலைப்போல, அஞ்சி ஒதுங்கி நின்றன. காணர் ("கோணடை மன்னர் தாருடைக் கலிமான்” - வேறுபாடம்)

300. எல்லை எறிந்தோன் தம்பி!

பாடியவர்: அரிசில் கிழார். திணை: தும்பை. துறை: தானைமறம். o

(களத்திற்குப் புறப்படுவான் ஒருவனை நோக்கிக் கூறிய செய்யுள் இது. ‘நேற்று நின்னாற் கொல்லப்பட்டவனது தம்பி, நின்னைக் கொல்வது குறித்த பெருஞ்சினத்துடன் நின்னையே தேடித் திரிகின்றான்’ என்கின்றனர். 'குடிகோள் பற்றி வந்த வெகுளிக்குப் பேராசிரியர் இச் செய்யுளை எடுத்துக் காட்டுவர் (தொல், மெய்ப்பாட்டியல் சூ.10)

தோல்தா; தோல்தா' என்றி; தோலொடு துறுகல் மறையினும் உய்குவை போலாய், நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி, அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன், பேரூர் அட்ட கள்ளிற்கு 5 ஓர்இற்கு ஒரில் தேருமால் நின்னே.

கேடயத்தைக் கொண்டுவா கேடயத்தைக் கொண்டு வா!' என்று ஏன் வீணாகக் கத்துகின்றாய். கேடயத்தோடு துறுகல்லின் பின்னே நீ மறைந்து விட்டாலும் பிழைத்துப் போய் விடுவாயோ? நேற்றைய போரிலே நீ கொன்றாயே அவனுடைய தம்பி, அகலிலிட்ட குன்றிமணி போலச் சிவந்த கண்ணோடும், பேரூரிலே காய்ச்சிய கள் ஒரு வீட்டிலே இருப்பதறிந்த வேட்கையன், அங்குச் சென்று கலயந்தேடுவது போன்ற வெறியோடும், நின்னை வீடு வீடாகத் தேடியலைகின்றான். அதனாற் போரிட நினையாதே; ஒடிப் பிழைத்து உயிர் உய்வாயாக!

301. அறிந்தோர் யார்?

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார். திணை: தும்பை. துறை: தானை மறம்.