பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

295


("வேந்துர் யானைக்கு அல்லது ஏந்துவன் போலான் தன் இலங்கிலை வேலே என ஒரு மாவீரனது மாண்பைக் கூறுகின்றது செய்யுள். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனையோ, அல்லது பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனையோ இச் செய்யுள் குறிப்பதுமாகலாம்) .

பல் சான்றீரே பல் சான்றீரே!

குமரி மகளிர் கூந்தல் புரைய,

அமரின் இட்ட அருமுள் வேலிக் கல்லென் பாசறைப் பல்சான் lரே! முரசுமுழங்கு தானைநும் அரசும் ஓம்புமின்! 5 ஒளிறு எந்து மருப்பின் நும் களிறும் போற்றுமின் எனைநாள் தங்கும்நும் போரே, அனைநாள் எறியார் எறிதல் யாவனது? எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான்; அதனால் அறிந்தோர் யார்? அவன் கண்ணிய பொருளே! 10

'பலரேம் என்று இகழ்தல் ஓம்புமின் உதுக்காண் நிலன் அளப் பன்ன நில்லாக் குறுநெறி,

வ்ண்பரிப் புரவிப் பண்புபாராட்டி, எல்லிடைப் படர்தந் தோனே, கல்லென வேந்துர் யானைக்கு அல்லது, 15

ஏந்துவன் போலான், தன் இலங்கிலை வேலே!

- பல் சான்றீரே. குமரி மகளிர் கூந்தலைப்போல அடர்த்தியாக முள்வேலியிட்டு, அதனுள் பாசறையிலே இருக்கும் பல் சான்றீரே! முரசு முழங்கும் படையோடும் சேர்ந்து தும் அரசனைக் காத்துக் கொள்ளுங்கள்! நும் களிறுகளையும் காப்பாற்றுங்கள்! எத்தனை நாட்கள்தாம் நுங்கள் பாசறை இங்கே இருந்துவிடும்? போருக்கு வராதவரோடு போரிடுதல் எங்கே உளது? தனக்கு நிகரற்றார் போரிட வந்து எதிர்த்தாலும் அவர்க்கு எதிராகப் போரிடான் எம் தலைவன். அவன் என்ன எண்ணியுள்ளானோ? அதனை அறிந்தார்தாம் யாவரோ? பலருடையோம் என்ற தருக்கியும் அவனை இகழாதீர். இதோ பாருங்கள்! வேகமாகச் செல்லும் குதிரையேறி இரவிற்குத் தன் இல்லம் சென்றுள்ளான். நுங்கள் வேந்தனுக்கு எதிராக அன்றி, அவன் தன் வேலைப் பிறர் மாட்டு எறியான். எனவே, நாளைக் காலை நும் வேந்தை முதலிலே காத்திடுங்கள், அற்றேல் ஓடி உய்யுங்கள்!