பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

297


(எள்ளுநர்ச் செகுக்கும் காளை பாகிய ஒருவன், தன் போர்க் குதிரை மேலோனாகச் சென்று, ப கைவேந்தரது பீடழித்த சிறப்பைப் பாடுகின்றனர் புலவர்)

நிலம்பிறக் கிடுவது போலக் குளம்புகுடை ஆஉ உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல் எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த வெந்திறல் எஃகம் நெஞ்சுவடு விளைப்ப ஆட்டிக் காணிய வருமே; நெருநை, 5 உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க், கரைபொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து, அவர் கயந்தலை மடப்பிடி புலம்ப, இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே. நிலத்தைப் பிளந்துவிடுவது போலக் காற்குளம்பை அன்றிக் கொண்டு, காண்போர் நெஞ்சம் நடுங்க வரும் குதிரையின் (மேலே வருகின்றானே ஓர் வீரன், அவன், தன்னை இகழ்வாரைக் கொ. I அழிக்கும் மிக்க திறலினையுடையவன். தன்னை எதிர்த்த." மார்புகளிற் கூரிய வேலைப் பாய்ச்சிக் கொன்று குவித்தவனாக, அதனைக் கையில் வெறியோடும் ஆட்டிக் கொண்டே வருகின்றான். புகழ்பெற்ற வேந்தர்களின் முன்னிலையிலேயே, கடலைப் பிளந்து செல்லும் படகுபோலப் படையணிகளைக் கொன்றுகுவித்த மாவீரன் அவன்! என்னை நோக்கி வருகின்ற அவனுடன், யான் செய்யப் போகின்ற சிறந்த போரையும் இனிக் காண்பீராக!

304. எம்முன் தப்பியோன்!

பாடியவர்: அரிசில் கிழார். திணை: தும்பை. துறை: குதிரை மறம்.

('என் முன்னோனைக் கொன்றவனின் தம்பியோடு, யான் நாளைப் போரிடுவேன்' என்றான் ஒரு மறவன்; அது கேட்டுப் பகையரசரது பாசறை, "அவன் கூறியது இரண்டாகாது’ என்று நினைத்து நடுங்கியதாம். இதுவும் தகடூர்ப் போரிடை ஒரு நிகழ்ச்சியாகலாம். 'புன் வயிறு அருத்தலுஞ் செல்லான்’ என்பது, அவன் கொண்ட கடுஞ்சினத்தைக் காட்டுவதாகும்.)

கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி, நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி, வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி பண்ணற்கு விரைதி, நீயே, நெருநை என்முன் தப்பியோன் தம்பியொடு, ஒராங்கு 5