பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

299


ஆகியவற்றை நீக்கித், தன் யானைகளின் மணிகளையும் களைந்து விட்டனனே!

306. ஒண்ணுதல் அரிவை!

பாடியவர்: அள்ளுர் நன் முல்லையார். திணை: வாகை. துறை: மூதின் முல்லை.

(இதுகண்டோர் கூற்று ஆகும்.'நடுகல் கை தொழுது பரவும் என்றது, தன் குடிக்கண் மறப்போராற்றி நடுகல்லாயின முன்னோரைப் பரவுதும் என்றதாம். தன் தலைவன் வகை எய்துக' என்றாள், அவன் உறுதியாக வென்று வருவான் என்பதனால், கொற்றச் செழியனது அள்ளுரினர் இவர்)

களிறுபொரக் கலங்கு, கழல்முள் வேலி, அரிதுஉண் கூவல், அங்குடிச் சீறுர் ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை நடுகல் கைதொழுது பரவும், ஒடியாது; விருந்து எதிர் பெறுகதில் யானே, என்ஐயும் மோ.......வேந்தனொடு. - நாடுதரு விழுப்பகை எய்துக எனவே.

களிறுகள் பொருதி இடையிடையே சிதைந்த முள்வேலியும், மக்கள் அரிதாகவே வந்து உண்ணும் நீர்நிலையும் உடைய சிறிய ஊரிலே வாழ்ந்தாள் ஒரு மறக்குல இளையவள். போருக்குச் சென்ற அவள் கணவன், விரைந்து நாடுதரு பெரும்பகையை ஒழித்து வருதல் வேண்டுமெனத் தன் குடி முன்னோரின் நடுகற்களை, 'இடைவிடாது விருந்தினர் வரப் பெறுவேனாக யான்; என் கணவன், பகைவரை ஒழித்து விரைந்து வருக என் வேண்டுகின்றாள். அதனைக் காண்மின்! -

307. யாண்டுளன் கொல்லோ!

பாடியவர்:பெயர் புலனாகவில்லை. திணை: தும்பை. துறை:

களிற்றுடனிலை.

(தன்னாற் களத்தில் கொல்லப்பட்ட களிற்றுடன் ஒரு வீரன் தானும் மடிந்து வீழ்ந்த சிறப்பைக் கூறுவது இது களிறு எறிந்து எதிர்ந்தோர் பாடு' என்பதற்கு இளம்பூரணனார் எடுத்துக் காட்டுவர் (தொல், புறத். சூ. 14) தன் நாட்டுக்காக நெஞ்சற வீழ்ந்த புரைமையோன் அவன் ஆதலை நினைக்க)

ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ? குன்றத்து அன்ன களிற்றொரு பட்டோன், வம்பலன் போலத் தோன்றும், உதுக்காண்;