பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

புறநானூறு - மூலமும் உரையும்


அஞ்சாது நின்று சென்று, பகை மன்னர் களிற்றையும் கொன்று, மீண்டு வருதல், வளர்ந்து காளையான அவன் கடமையாகும். இதனை அறிவீராக!

313. வேண்டினும் கடவன்!

பாடியவர்: மாங்குடி மருதனார். திணை: வாகை. துறை: வல்லாண் முல்லை.

(தலைமகனின் வல்லாண்மையைப் போற்றுகிறது. வேந்தன் சீர்சால் சிறப்பு எடுத்துரைத்த"லுக்கு நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டுவர். (தொ. புறத். சூ. 5)

அத்தம் நண்ணிய நாடுகெழு பெருவிறல் கைப்பொருள் யாதொன்றும் இலனே, நச்சிக் காணிய சென்ற இரவன் மாக்கள் i களிறொடு நெடுந்தேர் வேண்டினும், கடவன்; உப்பொய் சாகாட்டு உமணர் காட்ட 5

கழிமுரி குன்றத்து அற்றே, எள் அமைவு இன்று; அவன் உள்ளிய பொருளே.

கடல் எல்லைவரை பரவிய பெருநாட்டின் வேந்தன் அவன். என்றாலும் கூட, அவனிடம் கைப்பொருள் என்று குறிப்பிட யாதொன்றும் இல்லாதவனாகவே உள்ளனன். அவனைக் காணச்சென்ற இரவலர்க்குக் களிறும் தேரும் வேண்டினாலும் தந்துவிடும் தகுதியுடையவன் அவன். உப்பினை வண்டிவண்டி யாகக் கொண்டு செல்லும் உமணரது அளங்களிலே காணப்படும் குன்றைப் போன்று, என்றும் குறைவின்றி வருவதும் போவதுமாயிருப்பதே அவன் விரும்பும் பொருளுமாகும்.

314. மனைக்கு விளக்கு!

பாடியவர்: ஐயூர் முடவனார். திணை: வாகை. துறை: வல்லாண் முல்லை.

(ஒரு மறவனது வல்லாண்மையைச் சிறப்பிக்கிறது செய்யுள். முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகையாளன் அவன். நிறையழிந்து எழுதரு தானைக்குத் தானே சிறையாக விளங்கும் சிறப்பினனும் அவன். அவனைப் பாராட்டுகின்றனர் புலவர்)

மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன், முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை, நடுகல் பிறங்கிய உவல்இடு பறந்தலைப், புன்காழ் நெல்லி வன்புலச் சீறுர்க் குடியும் மன்னுந் தானே, கொடியெடுத்து 5