பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Heólų iš Gästsdir , - 3O7

பகைவர்நாட்டை வென்று எதனையும் கொண்டு தருவான் என்பது கருத்து) -

வென்வேல்.நது முன்றில் கிடந்த பெருங்களி யாளற்கு அதளுண்டாயினும், பாய்உண்டு ஆயினும், யாதுண்டு ஆயினும், கொடுமின் வல்லே, வேட்கை மீளப. 5


கும், எமக்கும், பிறர்க்கும், யார்க்கும், ஈய்ந்து, துயில்ஏற் பினனே.

முற்றத்திலே கிடக்கும் கள்ளுண்டு மயங்கிய இவனுக்கு, தோலுண்டாயினும் பாயுண்டாயினும் வேறு எதுவுண்டாயினும் உடனே தருக. அதிற் கிடந்து அவன் வேட்கை தெளியட்டும். மயங்கும்வரை எமக்குக் கள்தரும் அவனோ எமக்கும் பிறர்க்கும் யார்க்கும் கொடுத்துக் கொடுத்து, அவர் சென்ற பின்னரே உறக்கங்கொள்ளும் இயல்பினனாவான்.

318. பெடையொடு வதியும்!

பாடியவர்: பெருங்குன்றுார் கிழார். திணை: வாகை. துறை: வல்லாண் முல்லை.

(வேந்தனுக்கு ஒரு துன்பம் என்றால், அதனைப் போக்க முன்னிற்கும் மறமேம்பாடு கொண்டவன் ஒருவனைக் கண்ட போது, சொல்லிய செய்யுள் இது, 'ஊர் பசித்தது' என்றது, அனைத்தையும் வந்தார்க்கு வழங்கிப் போக்கிய சிறப்பால் என்று காட்டற்காம்)

கொய்யடகு வாடத் தருவிறகு உணங்க,

மயில் அம் சாயல் மாஅயோளொடு

பசித்தன்று அம்ம, பெருந்தகை ஊரே -

மனைஉறை குரீஇக் கறையணற் சேவல்

பாணர் நரம்பின் சுகிரொடு, வயமான் 5

குரல்செய் பீலியின் இழைத்த குடம்பைப், பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து, தன் புன்புறப் பெடையொடு வதியும் யாணர்த்து ஆகும் வேந்துவிழு முறினே.

கொய்த இலைகள் சமைப்பாரற்று வாடி வதங்குகின்றன கொணர்ந்த விறகும் தீமூட்டுவாரின்றிக் கிடந்து காய்கின்றது.மயில் போன்ற சாயலும் மாமை நிறமும் உடைய நங்கையரோடு. விளங்கும் அப் பெருந்தகையின் ஊர் அவனுக்கு ஒரு துன்ப