பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

புறநானூறு - மூலமும் உரையும்


மென்றால் பசியினால் பெரிதும்துன்புறும்.ஆனால்,அஃதின்றேல், ஊர்க் குருவிச் சேவல் நெல்லரிசியைப் பெரியவிளைவயலிலே தன் பெடையுடன் நிறைய உண்டு, மனையிறைப்பிலேயுள்ள தன் கூட்டிலே வந்து தங்கி மகிழும் அளவுக்குப், புதுவருவாய் உடையதாகவும் விளங்கும்.

319. முயல் சுட்டவாயினும் தருவோம்!

பாடியவர்: ஆலங்குடி வங்கனார். திணை: வாகை. துறை: வல்லாண் முல்லை.

('நெருநை ஞாங்கர் வேந்துவிடு தொழிலொடு சென்றனன்; வந்து, நின் பாடினி மாலையணிய, வாடாத் தாமரை நினக்குச் சூட்டுவன் எனத் தலைவனுக்கு அணுக்கனாகிய ஒருவன், வந்திரந்த பாணனுக்குத் தன் தலைவனது மேம்பாட்டைக் கூறுகின்றனன்.)

பூவற் படுவிற் கூவல் தொடிய

செங்கண் சின்னி பெய்த சீறில் முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி, யாம் கஃடு உண்டென, வறிது மாசின்று; படலை முன்றிற் சிறுதினை உணங்கல் 5

புறவும் இதலும் அறவும் உண்கெனப் பெய்தற்கு எல்லின்று பொழுதே, அதனால், முயல்சுட்ட வாயினும் தருகுவோம்; புகுந்தது ஈங்குஇருந் தீமோ முதுவாய்ப் பாண! கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி 10 புன்றலைச் சிறாஅர் கன்றெனப் பூட்டும் சீறுர் மன்னன் நெருநை ஞாங்கர், வேந்துவிடு தொழிலொடு சென்றனன், வந்துநின் பாடினி மாலை யணிய, வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே. 15

முதுவாய்ப் பாணனே! வளைந்த கொம்புகளை உடைய காட்டுப்பசுவின் இளங்கன்றைச் சிறுவர் தம் சிறுதேரிலே சேங்கன்றாகப் பூட்டி விளையாடும் சிறந்த இவ்வூரின் மன்னனாகிய எம் தலைவன், நேற்றுத்தான் வேந்தன் ஏவிய தொழிலை மேற்கொண்டு சென்றுள்ளான். அவன் வந்ததும், நின் பாடினி பொன்னரி மாலை அணியவும், நீ பொற்றாமரை சூடவும், வழங்கி மகிழ்வான். இப்பொழுதோ, செம்மண் நிலத்து ஊற்றிலே முகந்துவந்த நீர் கொஞ்சமாக முற்றத்திலே உள்ள பழஞ்சாடியின் அடிப்பகுதியிலே உள்ளது. தூய்மையான நீர் அது. பொழுதோ