பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

புறநானூறு - மூலமும் உரையும்


மிகுந்து, அதே நினைவாக வருந்தும் கலைமான், அதனோடுங் கூடி மகிழ்ந்து திளைத்துக் கொண்டிருந்தது. அந் நிழலின் ஒருபுறத்தே தன் கணவனை அழைக்க வந்த மனைவி, அது கண்டு, கணவன் அவற்றின் விளையாட்டால் எழுந்து விடுவானோ என அஞ்சி, மானின் கூட்டம் கலைந்துவிடக் கூடாதே எனவும் அஞ்சி, செய்வதறியாது, தான் ஒசை எழ நடத்தலும் செய்யாதவளாக, ஒருபுறமாக அமைந்து நின்றனள்; அத்தகைய அருளுடைய இல்லத் தலைவியாதலின், பாணனே! நீ வருந்தாது அவன் வீடு செல்வாயாக. சென்றால், மான்தோலின்மேல் பரப்பி வைத் திருக்கும் தினையரிசியைக் கானக்கோழிகளும் இதலும் ஆரவாரித்துத் தின்பனபோல, நீயும் நின் சுற்றத்துடன் சுட்ட இறைச்சியும் ஆரல் மீனும் ஒருங்கே கூடியிருந்து தின்று மகிழலாம். அங்கேயே தங்கிச் செல்வாயாக! மேலும், வேந்தன் அவன் செயலுக்கு மகிழ்ந்து தரும் பெருஞ்செல்வத்தைப் பரிசிலர்க்குக் குறையாது கொடுக்கும் வண்மையும் உடையவன் அவன். புகழ்பெற்ற அந் நெடுந்தகை ஆட்சி செய்யும் ஊர் அதுவே. செல்க! நின் பசியும் தொலைக!

321. வன்புல வைப்பினது!

பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார். திணை: வாகை. துறை: வல்லான் முல்லை.

(போரை விரும்புதலையுடைய தலைவன் ஒருவனின் கொடையாண்மையினையும், வல்லாண்மையினையும் போற்று கின்றனர் புலவர்)

பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்

மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெள்

சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு உடன்

வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன

குடந்தைஅம் செவிய கோட்டெலி யாட்டக், 5

கலிஆர் வரகின் பிறங்குபீள் ஒளிக்கும், வன்புல வைப்பி னதுவே - சென்று

தின்பழம் பசியி.............னனோ பாண வாள்வடு விளங்கிய சென்னிச் செருவெங் குருசில் ஓம்பும் ஊரே. 10

முற்றத்திலே இனிப்புச் சேர்ந்த வெள்ளெள்ளை இடித்துச் சுளகிலே காய வைத்திருந்தனர். பூழ்ப்பறவைச் சேவல் ஒன்று அதனைக் கவர்ந்து உண்டு, கோங்கம் பூவின் இதழ் போன்ற வளைந்த செவியினையுடைய வரப்பு எலியினைப் போய்