பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

313


வலாஅர் வல்வில் குலாவரக் கோலிப், பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் புன்புலம் தழிஇய அங்குடிச் சீறுர்க், குமிழ்உண் வெள்ளைப் பகுவாய் பெயர்த்த வெண்காழ் தாய வண்காற் பந்தர், - 1 O இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப், பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை, வலம்படு தானை வேந்தற்கு உலந்துழி உலக்கும் நெஞ்சறி துணையே.

ஆண் வெருகு (காட்டுப் பூனை) போன்று, வெருண்டு நோக்கும் பெருந்தலையும், பறவை இறைச்சிகளைத் தின்று புலவு நாறும் பெரிய வாயும் உடைய வேட்டுவச் சிறுவர்கள், தம்முள் துணைவரோடும் சேர்ந்து எலி வேட்டை ஆடச் செல்வர். ஊக நுண்கோலிலே வளாரை நாணாகப் பூட்டி, உடைமரத்தின் முள்ளினை அம்பாக வைத்துப் பருத்திக் காட்டு வேலிப்புறத்திலே எலிக்குக் குறி பார்த்திருப்பவர் அவர். அத்தகைய புன்செய் நிலங்கள் சூழ்ந்தன அவன் ஊர். குடிமக்களும் மிகவும் நல்லவர்கள் அவ்வூரிலே, வெள்ளாட்டு பிழுக்கைகள் சிதறிக் கிடக்கும் பந்தரின் அடியிலே, இடையன் ஏற்றிவைத்த சிறுதீயின் ஒளியிலே, பாணரோடும் உடன் இருக்கின்றனன் அவன். (வீட்டை விட்டு வெளியே ஆட்டுக் கிடையை மேற்பார்க்கச் சென்றவிடத்தும் பாணரை உபசரித்தான் என்பது கருத்து) அவ்வளவு அமைதியாக இருக்கும் அவன், வெற்றிச் சிறப்புடைய படையணிகள் கொண்ட வேந்தனுக்கு ஏதாவது துன்பம் என்றால், அதனைத் தனக்கு வந்தது போலவே கருதி, உடனே போருக்குத் தானும் எழும் மனங்கலந்த துணைவனும் ஆவான். -

325. வேந்து தலைவரினும் தாங்கும்!

பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார். திணை: வாகை. துறை: வல்லாண் முல்லை.

("வேந்து தலைவரினும் தாங்கும் தாங்கா ஈகை நெடுந்தகை' எனத் தலைவனது ஆண்மைத்திறனைப் போற்றுகின்றது செய்யுள். வேட்டையிற் கிடைத்த முள்ளம்பன்றியையும் உடும்பையும் அறுத்துப் பலருக்கும் பகுத்துக் கொடுக்கும் பண்பையும்

காணலாம்.) -

களிறுநீ றாடிய விடுநில மருங்கின், வம்பப் பெரும்பெயல் வரைசொரிந்து இறந்தெனக் குழிகொள் சின்னி குராஅல் உண்டலின்,