பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

புறநானூறு - மூலமும் உரையும்



சேறுகிளைத் திட்ட கலுழ்கண் ஊறல் முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை, 5

முளவுமாத் தொலைச்சிய முழுச்சொல் ஆடவர் உடும்பிழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச் சீறில் முன்றில் கூடுசெய் திடுமார் கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம் மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து, 10

அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல், கயந்தலைச் சிறாஅர் கணைவிளை யாடும் அருமிளை இருக்கை யதுவே - வென்வேல் y வேந்துதலைவரினும் தாங்கும், தாங்கா ஈகை, நெடுந்தகை ஊரே. 15

களிறுகள் நீராடிய ஊற்றுக்கு அருகாமையிலுள்ள பூமியிலே பெரும் அடைமழை பெய்து வெறித்தாற்போலக் குழி குழியாக நீர் தேங்கி நிற்க, அதனைப் பசுக்கள் உண்ணும். அதனால் எங்கும் சேறுபடும். அச் சேற்றிற்கு அருகாமையில் உள்ள ஊற்றுநீரையே முறை முறையாகச் சென்று முகந்து உண்பதுடன், பன்றியை வெல்லும் ஆற்றலும் உடையவர் வேட்டுவர். அவ்வாறு தாம் கொன்றுவந்த பன்றித் தசையை அறுத்துப், படலைச் சிறு முற்றத்திலே தமக்குள் பங்கு வைத்துத் தின்பதற்காக நெருப்பிலே வாட்டிக் கொண்டிருப்பர். அத்தகைய நிணநாற்றம் தெரு வெல்லாம் கமழ்வது அவன் ஊர். அங்கே, மன்றத்து இரத்திமர நிழலிலே பெரிய தலையையுடைய சிறுவர்கள் கணை எய்து விளையாடிக் கொண்டும் இருப்பர். கடத்தற்கரிய காவற்காடுகள் சூழ்ந்ததும், வெற்றிவேலைக் கொண்டு மூவேந்தரும் தம் பெரும்படைகளுடன் ஒருங்கேவரினும் தாங்கும் ஆற்றலுடையதும் அவ்வூர். அதுவே, குன்றாத ஈகை உடையவனான எம் நெடுந்தகையின் பேரூர் ஆகும்.

326. பருத்திப் பெண்டின் சிறு தீ!

பாடியவர்: தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார். திணை: வாகை. துறை: மூதின் முல்லை.

(மறக்குடி மகளிரது கொடைப் பண்பையும் அவர் தலைவர்களது மறப்பண்பையும் வியந்து போற்றுகின்றது செய்யுள். ‘அண்ணல் யானை அணிந்த பொன்செய் ஒடைப் பெரும் பரிசிலன்' என்றதனால், அவன் பகையரசனது பட்டத்து யானையையும், அஃதுர்ந்து வந்தானாகிய அவனையும் கொன்ற சிறப்பினன் என்பது அறியப்படும்)