பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

315


ஊர்முதுவேலிப் பார்நடை வெருகின் இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்றச், சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக், 5 கவிர்ப்பூ நெற்றிச் சேவலின் தணியும் அருமிளை இருக்கை யதுவே - மனைவியும், வேட்டச் சிறாஅர் சேட்புலம் படராது, *படமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின் விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை, 10

யாணர் நல்லவை பாணரொடு, ஒராங்கு வருவிருந்து அயரும் விருப்பினள்; கிழவனும் அருஞ்சமம் ததையத் தாக்கிப் பெருஞ்சமத்து அண்ணல் யானை அணிந்த பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே. 15

(* படப்பைக் கொண்ட - வேறு பாடம்)

இரவிலே வெருகுக்கு (காட்டுப் பூனை) அஞ்சிய இளம் பேடையொன்று உயிர் நடுக்குற்றுத் தொண்டைவறளக் கூவ, அவ் வேளையிலே பருத்தி நூற்கும் பெண்டு பஞ்சிற் கலந்திருக்கும் சிறையும் செற்றையும் புடைப்பதற்குச் சிறு அகல்விளக்கினை ஏற்றிக் கொண்டு எழுந்திருக்க, அவ்வொளியிலே, தன் அருகே தூங்கும் தன் சேவலைக் கண்டு அச்சம் தணியும். அத்தகைய இருக்கையான வீட்டிலுள்ள இல்லத் தலைவியானவள், வேட்டுவச் சிறுவர்கள் நெடுந்தொலைவு செல்லாமல் மடுக்கரையிலேயே பிடித்துக் கொண்டுவந்த உடும்பின் இறைச்சியைச் சமைத்துத், தயிரோடு கூழையும் பிற நல்ல உணவுப் பொருள்களையும் செய்து, பாணரோடு கலந்து உண்ணவேண்டும் என்ற விருப்பம் கொண்டிருப்பவள். அவள் கணவனும், அரிய போரில் பகைவர் அழியுமாறு தாக்கி, அப் பெரும்போரிலே வேந்தர்களின் கொல்யானைகள் அணிந்து வந்த பொற்பட்டங்களைப் பறித்து வந்து, அவற்றைப் பரிசிலர்க்கு வழங்கி மகிழும் வீரமும் ஈகையும் உடையவனாவன். ஆதலின், அங்கேயே செல்க பாணனே!

327. வரகின் குப்பை! பாடியவர்: பெயர் தெரிந்திலது. திணை: வாகை. துறை: மூதின் முல்லை.

(வரகு கடன் இரக்கும் நெடுந்தகை, அரசு வரின் தாங்கும் வல்லாளன்’ என்பது, சிறந்த ஒவியமாகும். ‘புல்லா வாழ்க்கை